இந்திய விஞ்ஞானிகளுடன் பணியாற்ற வெளிநாட்டவர் ஆர்வம்

Updated : ஜூன் 09, 2022 | Added : ஜூன் 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பரங்குன்றம்-'இந்திய விஞ்ஞானிகளுடன் பணியாற்ற வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் உள்ளனர்'என டில்லி சைபர், ஏரோஸ்பேஸ் செக்யூரிட்டி ஆலோசகர் நிஷாகந்த் ஓஜா பேசினார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா தாளாளர்கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. முதல்வர் பழனி நாகராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.நிஷாகந்த் ஓஜா பேசியதாவது: பொறியியல் முடித்தவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பரங்குன்றம்-'இந்திய விஞ்ஞானிகளுடன் பணியாற்ற வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் உள்ளனர்'என டில்லி சைபர், ஏரோஸ்பேஸ் செக்யூரிட்டி ஆலோசகர் நிஷாகந்த் ஓஜா பேசினார்.



latest tamil news



மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா தாளாளர்கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. முதல்வர் பழனி நாகராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.நிஷாகந்த் ஓஜா பேசியதாவது: பொறியியல் முடித்தவர்கள் சிறந்த பொறியாளர்களாக மட்டுமின்றி மேலாண்மையில் வல்லமை படைத்தவர்களாகவும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நின்றுவிடாமல் அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். அனைவரும் நேர்மையாக செயல்பட்டு நாம் சார்ந்த நிறுவனம் மற்றும் தாய்நாட்டை பாதுகாத்து வளர்ச்சிப் பாதையில்கொண்டு செல்ல வேண்டும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் இந்திய விஞ்ஞானிகளுடன்சேர்ந்து பணியாற்ற ஆர்வத்துடன் உள்ளனர்.முன்பு இந்தியா வெளிநாடுகளில் இருந்து பொருட்கள், தொழில் நுட்பங்களை இறக்குமதி செய்த நிலை இருந்தது.


latest tamil news


பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் தற்போது தொழில்நுட்பத்தை இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வளர்ந்துள்ளோம்.இந்தியாவில் 9060 கூட்டுறவு வங்கிகளில் பழைய சிஸ்டம் தான் பயன்படுத்தப்படுகிறது. அந்த வங்கிகளை பாதுகாக்க இந்திய அரசு சைபர் செக்யூரிட்டி சிஸ்டத்தை பயன்படுத்தப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் 50 கூட்டுறவு வங்கிகளில் இந்த சிஸ்டம் துவக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் வந்துவிடும், என்றார்.பதிவாளர் ராஜாராம் நன்றி கூறினார். சிறந்த மாணவர்களாக தேர்வான தருண், பிரவீன்குமார், டிந்தியஸ்ரீ, சவுமியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
09-ஜூன்-202216:35:24 IST Report Abuse
MARUTHU PANDIAR சப்பை மூக்கன் மற்றும் பாக். மூர்க்க தேசத்தத்திலிருந்து ''விஞ்ஞானி" போர்வையில் அசைன்மென்ட்டுடன் அவனுக காட்டுக்கிட்டிருப்பனுவ -உஷா உஷார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X