மகன் உடலை வாங்க அரசு மருத்துவனைக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த தம்பதி| Dinamalar

மகன் உடலை வாங்க அரசு மருத்துவனைக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த தம்பதி

Added : ஜூன் 09, 2022 | கருத்துகள் (36) | |
சமஸ்டிபூர்(பீஹார்): இறந்து போன தங்களது மகன் உடலை வாங்க அரசு மருத்துவமனைக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாததால், வேதனை அடைந்த வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் பீஹாரில் நடந்தது.பீஹார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர், இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். வீடு திரும்பவில்லை. இந்நிலையில்
 Bihar Couple Begs For Money To Pay ₹ 50,000 "Bribe" To Hospital For Son's Body

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சமஸ்டிபூர்(பீஹார்): இறந்து போன தங்களது மகன் உடலை வாங்க அரசு மருத்துவமனைக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாததால், வேதனை அடைந்த வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் பீஹாரில் நடந்தது.

பீஹார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர், இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சதார் அரசு மருத்துவமனையில் தனது மகனின் உடல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி உடலை வாங்க மகேஷ் தாக்குர், தனது மனைவியுடன் அரசு மருத்துவமனை சென்றார்.


latest tamil news
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளது பணம் இல்லையென்பதால், தெருதெருவதாக பிச்சை எடுத்தனர்.
இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வரைலாக பரவியது. இது குறித்து மருத்துவமனை உயரதிகாரி கூறுகையில், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பானர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X