ரூ. 180 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்; கடலூர் மாநகராட்சியில் கலந்தாய்வு

Updated : ஜூன் 09, 2022 | Added : ஜூன் 09, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கடலுார்-கடலுார் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 180 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவது தொடர்பாக, அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 27ல் முழுமையாகவும், 9 வார்டுகளில் பகுதியாகவும், மீதியுள்ள 9 வார்டுகளில்புதிதாகவும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது.இதற்காகரூ. 180 கோடி ரூபாயில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடலுார்-கடலுார் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 180 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவது தொடர்பாக, அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.



latest tamil news



கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 27ல் முழுமையாகவும், 9 வார்டுகளில் பகுதியாகவும், மீதியுள்ள 9 வார்டுகளில்புதிதாகவும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது.இதற்காகரூ. 180 கோடி ரூபாயில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது


latest tamil news


.மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். குடிநீர் வடிகால் வாரியம், மின்துறை அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர்.கூட்டத்தில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் பேசினர். அப்போது, கவுன்சிலர்கள் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே பாதாள சாக்கடை முடிந்த இடங்களிலும் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடுகிறது.

அதையும் சேர்த்து சீரமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாகசெயல்படுத்த வேண்டும் என, தெரிவித்தனர்.விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து,அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-ஜூன்-202218:44:10 IST Report Abuse
bal இன்னொரு அபேஸ்..எதனை தடவி கடலூருக்கு திட்டம் போட்டார்கள்..அந்த பணம் எங்கே போனது..இன்னுமா போடலை.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-ஜூன்-202211:43:29 IST Report Abuse
duruvasar பாதாளம் வரை போகும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202206:15:12 IST Report Abuse
Mani . V வெளியில் தெரியும்படி கட்டுவதே காணாமல் போகிறது. (கரூரில் செந்தில் பாலாஜி கட்டிய கால்வாய் 25 நாளிலேயே காணாமல் போய் விட்டது) பாதாளம் என்றால் கேட்கவா வேண்டும்? பாதாள சாக்கடையை கட்டாமல், கட்டியதாகச் சொல்லி ஆட்டையை போட்டு விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X