அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும்: அமைச்சர் 'பல்டி'

Updated : ஜூன் 09, 2022 | Added : ஜூன் 09, 2022 | கருத்துகள் (57) | |
Advertisement
சென்னை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது வகுப்புகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, தொடக்க பள்ளிகளையும், அங்கன்வாடிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அரசு பள்ளிகளுடன்
LKG, UKG, Govt Schools, Minister, Anbil Mahesh, எல்கேஜி, யுகேஜி, அரசு பள்ளி, தொடரும், அமைச்சர், அன்பில் மகேஷ்

சென்னை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது வகுப்புகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.



அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, தொடக்க பள்ளிகளையும், அங்கன்வாடிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அரசு பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களை, அரசு பள்ளிகளின், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்பில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.



latest tamil news




இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் கூறியதாவது: பள்ளி கல்வித் துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில், பணியாற்றிய ஆசிரியர்கள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கான பணியில், முழுமையாக ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.



பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல அரசியல் கட்சியினர்கள் அரசின் இந்த முடிவை திரும்ப பெற வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது அவர் கூறுகையில், ‛பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் அறிவுரையின்படி அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்' எனக் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-ஜூன்-202202:33:54 IST Report Abuse
BASKAR TETCHANA இவனுக்கு அரிச்சுவடியை தெரியாது. இவனை பொய் கல்வி மந்திரியாக ஆக்கினான் அவனை சொல்லணும். இவனுக்கு மந்திரிசபையில் சேர்க்க சொன்னதே கேபினெட் மந்திரிகள் தானாம். அதுவும் இளையராஜாவின் முக்கியமானவர்தானாம். ஒரு நாளைக்கு ஒரு முடிவு எடுத்தால் குழந்தைகள் நிலைமை என்னாவது. இவனுக்கும் இரண்டு பிள்ளைகள் திருச்சியில் படிக்கின்றனர். இவர்கள் இருவரும் அரசு பள்ளிகளிலா படிக்கிறார்கள். ... நடத்தும் பள்ளிகளில் படிக்கின்றனர். விரைவில் எல்லோருக்கும் சுளுக்கு எடுக்கப்படும்..
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
09-ஜூன்-202219:56:19 IST Report Abuse
Mohan தயவு செய்து தமிழ்நாட்டு மக்களே, அடுத்த தேர்தலிலாவது வேட்பாளரின் திறமை தகுதி தெரிந்து வாக்கை பதிவு செய்யுங்கள். கட்சியைப் பார்க்காதீர்கள்.நீங்க பெற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பாருங்கள்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
09-ஜூன்-202219:46:57 IST Report Abuse
Mohan அட்ரா அட்ரா அந்தர் பல்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X