உருமாறியது கொரோனா : நான்காவது அலைக்கான அறிகுறி : ராதாகிருஷ்ணன் தகவல்

Updated : ஜூன் 10, 2022 | Added : ஜூன் 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால், நான்காவது அலைக்கான அறிகுறி துவங்கி விட்டதாக, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கல்லீரல் கொழுப்பு நோய் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின், செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:இந்தியாவில் கொரோனா பரவல், 40
கொரோனா   ,நான்காவது அலை , அறிகுறி ,  ராதாகிருஷ்ணன் ,

சென்னை: தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால், நான்காவது அலைக்கான அறிகுறி துவங்கி விட்டதாக, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கல்லீரல் கொழுப்பு நோய் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின், செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
இந்தியாவில் கொரோனா பரவல், 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கேரளா, மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த தொற்று பரவல், தற்போது உயர்ந்துள்ளது. எனினும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் குறைவு.


latest tamil news




ஆனாலும், 'பிஏ 4, பிஏ 5' வகை உருமாறிய கொரோனா தொற்றுகள், புதிதாக கண்டறியப்பட்டு உள்ளன. இது, நான்காவது அலை துவங்கியதற்கான அறிகுறி. மாநிலத்தில் நோய் தொற்று அதிகரித்து வருவதில், மாற்று கருத்தில்லை.
எனவே, பொது மக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிதல், அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்; பிறருக்கு பரப்பி விட வேண்டாம். மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட, ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தென்காசியில் இரண்டு பேருக்கு, 'டெங்கு வைரஸ்' பாதித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில், கருத்தரிப்பு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூன்-202216:06:28 IST Report Abuse
ஆரூர் ரங் விடியாத ஆட்சியையே பொறுத்துக் கொள்ளும் எங்களால் நூறாவது👹 அலையைக் கூட பொறுத்துக் கொள்ளமுடியும்.
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
10-ஜூன்-202207:05:09 IST Report Abuse
Sriniv இவர் கூறுவதை சரியாக புரிந்து கொண்டால், நான்காவது அலை ஆரம்பித்து விட்டது .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202206:02:00 IST Report Abuse
Mani . V இப்ப என்ன சொல்ல வர்றீங்க? இளவரசருக்கு பட்டம் சூட்டினால் சரியாகிப் போகுமுன்னு சொல்ல வாரீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X