அறிவியலை சமூகத்துடன் இணைப்பதில் திருப்புமுனை : எஸ்.எஸ்.ஆர். குறித்து நிபுணர் விளக்கம்

Updated : ஜூன் 10, 2022 | Added : ஜூன் 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அறிவியல் மற்றும் சமூகத் தொடர்பை வலுவாக்குவதற்காக, அறிவியல்சார் சமூக பொறுப்புணர்வு (எஸ்.எஸ்.ஆர்)கொள்கை வழிகாட்டுதல்களை, 2022 மே 11ல் இந்திய அரசு வெளியிட்டது. இதன்மூலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முடியும்.சர்வதேச அளவில் எஸ்.எஸ்.ஆரின் முக்கியத்துவம் குறித்து பேசிய முதல் அரசியல் தலைவர், நமது பிரதமர் நரேந்திர
 அறிவியல், சமூகம் ,திருப்புமுனை  எஸ்.எஸ்.ஆர்.  நிபுணர் விளக்கம்

அறிவியல் மற்றும் சமூகத் தொடர்பை வலுவாக்குவதற்காக, அறிவியல்சார் சமூக பொறுப்புணர்வு (எஸ்.எஸ்.ஆர்)கொள்கை வழிகாட்டுதல்களை, 2022 மே 11ல் இந்திய அரசு வெளியிட்டது. இதன்மூலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முடியும்.

சர்வதேச அளவில் எஸ்.எஸ்.ஆரின் முக்கியத்துவம் குறித்து பேசிய முதல் அரசியல் தலைவர், நமது பிரதமர் நரேந்திர மோடிதான். அவர், திருப்பதியில் 2017 ஜனவரி 3ல் நடந்த 104வது இந்திய அறிவியல் மாநாட்டில் இதுபற்றி பேசினார். தொடர்ந்து, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழுவால், தேசிய அளவில் விரிவான ஆலோசனை நடந்தது. அந்த குழுவின் தலைவராக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எஸ்.எஸ்.ஆர் பற்றி நிதி ஆயோக், மனிதவள மேம்பாடு, யுஜிசி (பல்கலைக்கழக நிதி கமிஷன்), ஏஐசிடிஇ (இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்), பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் மற்றும் பல அமைச்சகங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், நாடு முழுவதும் உள்ள கல்வி மையங்களில், மண்டல ரீதியான பயிற்சிப் பட்டறைகள், ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அவற்றின் அடிப்படையில், வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன.


latest tamil news

எஸ்.எஸ்.ஆர் விளக்கம்பணிகளைத் தாண்டி, பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து, அறிவியல்பூர்வ உள்கட்டமைப்புகளை நிறுவுதல், திட்டங்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அவசிய உதவிகளை வழங்குவதில் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உள்ள சக்தியை, தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் தெளிவாக உணர்ந்துள்ளார். அதன் விளைவாகவே எஸ்.எஸ்.ஆர்., உருவாக்கப்பட்டுள்ளது.
அறிவியல் திறன் மூலம் சமூகத்துக்கு சேவையாற்றுதல், அறிவியல் பயன்பாடுகளை சமூகத்திடம் கொண்டு செல்லுதல், சமூகத் தேவைகளுடன் அறிவியல் திறமைகளை இணைத்தல் ஆகியவற்றில், ஒவ்வொரு அறிவு பணியாளருக்கு, குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வுதான் எஸ்.எஸ்.ஆர்.
அறிவியல் - சமூகம் இடையிலான தகவல் பரிமாற்றம், இரு வழிப்பாதையில் நடக்க வேண்டும். சமூகத்தின் தேவைகளை, விஞ்ஞானிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.

எனவே, சமூகத்துடன் நெருக்கம் வளர்ப்பதும், அறிவை, ஆய்வுக்கூடத்தில் இருந்து வாழ்க்கை களத்துக்கு கொண்டு செல்வதும், சமூக வாழ்க்கை தரத்தை, குறிப்பாக ஏழை எளியோர் வாழ்க்கை தரத்தைமுன்னேற்றுவது, அறிவு பணியாளர்களின் முக்கியப் பொறுப்புணர்வாக அமைகிறது.

வசதி வாய்ப்பு குறைந்த கல்வி மையங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் உள்ள தனிநபர்களுடன் வளங்களையும் அறிவையும் பகிர்தல்; புத்திசாலிகளை அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு வரவழைப்பதற்காக பள்ளிக் குழந்தைகளிடம் உரையாற்றுதல்; மீடியா தொடர்பு; பொதுக்கூட்ட உரை; உள்ளூர் மொழிகளில் கட்டுரை எழுதுதல்; சமூக வீடியோ தகவல் பரிமாற்றம்; நேரடித் தொடர்பு;ஊரகத் தொழில்முயற்சிகளுக்கு உதவி; வசதி வாய்ப்பு குறைந்த கல்லுாரிகளின் மாணவர் திறன்களை அதிகரித்தல்; திட்ட அறிக்கை அல்லது அறிவியல் கட்டுரை தயாரிப்பில் உதவி ஆகியவற்றை விரிவாகச் செயல்படுத்த எஸ்.எஸ்.ஆர்., வழிவகுக்கிறது.
எஸ்.எஸ்.ஆரின் 15 நடவடிக்கைகளை, dst.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


செயல்பாடு முறை* தேசிய அளவில் எஸ்எஸ்ஆரை செயல்படுத்துவதில் பயனாளிகள், அமலாக்குவோர், மதிப்பீட்டாளர்கள், உதவியாளர்கள் என 4 முக்கியப் பங்களிப்பாளர்கள் இடம்பெறுவார்கள்.

* பயனாளிகள் தங்களது தேவைகளைப் பதிவு செய்ய, தேசிய அளவிலான ஒரு தளம் இருந்தால்தான், அவற்றைப் பூர்த்தி செய்யும் வழிகளை அறிவு பணியாளர்கள் உருவாக்கி, சமூகத்துக்கு கொண்டு சேர்க்க முடியும். எனவே, எஸ்.எஸ்.ஆர்., கொள்கைகளை அமலாக்க, ஒரு சிறப்பு நடவடிக்கை மையத்தை மத்திய அரசு உருவாக்கும்.

* அறிவு பணியாளர்கள் அனைவரும், ஆண்டுக்கு 10 வேலைநாட்களை எஸ்எஸ்ஆர் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம்.

* அரசு, அறிவியல் தொழில்நுட்பத் துறைகள், சிஎஸ்ஆர் மூலம் நிதியுதவி பெறும் தொழிற்சாலைகள், நன்கொடையாளர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், கல்வி மையங்களின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள், எஸ்எஸ்ஆர் முயற்சிகளின் உதவியாளர்களாகத் திகழ்வார்கள்.

* யுஜிசி, ஏஐசிடிஇ, மனிதவள மேம்பாடு அமைச்சகம் மற்றும் பிற அறிவியல் தொழில்நுட்பத் துறைகள், தங்களது பணியாளர் திறன் மதிப்பீடு முறையில் அவரது எஸ்.எஸ்.ஆர்., பங்களிப்பையும் ஒரு அம்சமாக இணைக்கலாம்.

* கல்வி மற்றும் ஆய்வு மையங்கள், எஸ்எஸ்ஆர் நடவடிக்கைகளைக் கணித்து, செயல்படுத்தி. அவற்றை வருடாந்திர அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தலாம்.

* நாக் அங்கீகரிப்பு, என்ஐஆர்எப் தரவரிசை உள்ளிட்ட அமைப்புகள், கல்வி மையத் தரங்களை மதிப்பிடும் முறைகளில், அவற்றின் எஸ்.எஸ்.ஆர்., பங்களிப்பையும் கணக்கில் கொள்ளலாம்.

* எஸ்.எஸ்.ஆர்., செயல்பாடுகளை எந்த ஒரு அமைப்புக்கோ, நிறுவனத்துக்கோ, கல்வி மையத்துக்கோ வழங்குவதை (அவுட்சோர்ஸிங்) எஸ்எஸ்ஆர் திட்டவட்டமாகத் தடை செய்துள்ளது.


பெருமிதம்... அழைப்புஅறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு ஜிடிபியில் ஒரு சதவீதத்தை விடக் குறைவான நிதி ஒதுக்கீடு உள்ள நிலையிலேயே சர்வதேச அளவில் அறிவியல் வெளியீடுகளில் 3வது இடம்,
காப்புரிமை பெறுவதில் 9வது இடம், புதுமை குறியீட்டில் 46வது இடம் என இந்தியா முன்னேறியிருக்கிறது. இது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த சூழலில், தேசம் பெருமிதப்படவேண்டிய அம்சம்.
சர்வதேச அளவில் ஆய்வு மற்றும் புதுமையில் முன்னிலை வகிக்கும் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியாவை முன்னேற்றுவதோடு, சுயசார்பு நாடாகவும் மாற்றுவதே பிரதமரின் லட்சியம்.
சமூகத்தையும் அறிவியலையும் இணைப்பதில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை உருவாக்க, தேசிய அளவில் அனைத்து பங்களிப்பாளர்களும் சரியான முனைப்போடு செயல்பட்டால், எஸ்.எஸ்.ஆர்., கொள்கை ஒரு மகத்தான திருப்புமுனையாக மாறும்.''அறிவு பணியாளர்களே! சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உங்களின் திறமைகளையும் சேவைகளையும் எஸ்எஸ்ஆர் முயற்சிகளால் விரிவாக்கி சமூகத்தை முன்னேற்றுங்கள்'' - இதுதான், நமது பிரதமர் மற்றும் மத்திய அரசின் கனிவான அழைப்பு.
(கட்டுரையாளர் டாக்டர் டபிள்யூ. செல்வமூர்த்தி, தேசிய அறிவியல்சார் சமூகப் பொறுப்புணர்வு குழுவின் தலைவராக அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டவர்; சட்டீஸ்கர் அமிட்டி பல்கலை துணைவேந்தர்.)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூன்-202215:35:17 IST Report Abuse
Balaji Radhakrishnan This is another step up to develop our country by Modiji. India will soon become fully own manufacturer in all fields.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X