மதுரை ஆதீனம் பேச்சு: விஜய் ரசிகர்கள் ஆவேசம்

Added : ஜூன் 10, 2022 | கருத்துகள் (58) | |
Advertisement
மதுரை : நடிகர் விஜய் படங்களை பார்க்கக்கூடாது என பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில், 'வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்தும்' என, ஆதீனத்தை எச்சரித்துள்ளனர்.மதுரையில் ஜூன் 5ல் துறவியர் மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய மதுரை ஆதீனம், 'நடராஜ சாமி, முருகன்
Vijay, Madurai Adheenam, Vijay Film, Poster

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : நடிகர் விஜய் படங்களை பார்க்கக்கூடாது என பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில், 'வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்தும்' என, ஆதீனத்தை எச்சரித்துள்ளனர்.

மதுரையில் ஜூன் 5ல் துறவியர் மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய மதுரை ஆதீனம், 'நடராஜ சாமி, முருகன் உள்ளிட்ட சாமிகளை கேவலமாக பேசுகின்றனர். நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த படத்தை பார்க்காதீர்கள்' என, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனால், தற்போது ஆதீனத்திற்கு எதிராக, விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.


latest tamil news



நேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில், 'மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேப்பா... நீங்கள் எல்லாம் தளபதியை பத்தி பேசலாமா தப்பா. வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்டாடும் அன்புக்கு வானமே எல்லை' என, வாசகங்களை அச்சடித்துள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையிலும், ஆதீனத்திற்கு ஆதரவாகவும், ஹிந்து அமைப்புகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sethu Thangavelu - Chennai,இந்தியா
11-ஜூன்-202210:20:38 IST Report Abuse
Sethu Thangavelu விஜய் அப்பா அம்மா உடன் வாழ தெரியாத .... முட்டாள்
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூன்-202220:21:59 IST Report Abuse
Venugopal S மதுரை ஆதீனம் ஏன் இப்படி தகுதி இல்லாதவர்களுடன் சேற்றில் புரண்டு சண்டை போட்டு அசிங்கப்படுகிறார் ? அவர் ஆதீனம் சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் நல்லது.
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
10-ஜூன்-202218:28:06 IST Report Abuse
Ramesh விஜய் அவர்கள் கூத்தாடி. தீய குணங்களை கற்று தரும் மதுவை விட மோசமான சினிமாவில் காசே பிரதானம் என்று நடிப்பவர். மதுரை ஆதீனம் நல்ல ஒழுக்கங்களை போதித்தும்,கடைபிப்டித்தும் வரும் ஆன்மீகவாதி. ரசிகர்கள் மாயை போதையில் இருக்கும் ஒரு நிலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X