மதுரை ஆதீனம் பேச்சு: விஜய் ரசிகர்கள் ஆவேசம்| Dinamalar

மதுரை ஆதீனம் பேச்சு: விஜய் ரசிகர்கள் ஆவேசம்

Added : ஜூன் 10, 2022 | கருத்துகள் (58) | |
மதுரை : நடிகர் விஜய் படங்களை பார்க்கக்கூடாது என பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில், 'வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்தும்' என, ஆதீனத்தை எச்சரித்துள்ளனர்.மதுரையில் ஜூன் 5ல் துறவியர் மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய மதுரை ஆதீனம், 'நடராஜ சாமி, முருகன்
Vijay, Madurai Adheenam, Vijay Film, Poster

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : நடிகர் விஜய் படங்களை பார்க்கக்கூடாது என பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில், 'வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்தும்' என, ஆதீனத்தை எச்சரித்துள்ளனர்.

மதுரையில் ஜூன் 5ல் துறவியர் மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய மதுரை ஆதீனம், 'நடராஜ சாமி, முருகன் உள்ளிட்ட சாமிகளை கேவலமாக பேசுகின்றனர். நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த படத்தை பார்க்காதீர்கள்' என, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனால், தற்போது ஆதீனத்திற்கு எதிராக, விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.


latest tamil newsநேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில், 'மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேப்பா... நீங்கள் எல்லாம் தளபதியை பத்தி பேசலாமா தப்பா. வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்டாடும் அன்புக்கு வானமே எல்லை' என, வாசகங்களை அச்சடித்துள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையிலும், ஆதீனத்திற்கு ஆதரவாகவும், ஹிந்து அமைப்புகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X