மரபணு பரிசோதனைக்கு முக்கியத்துவம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

Updated : ஜூன் 10, 2022 | Added : ஜூன் 10, 2022 | |
Advertisement
சென்னை : நாடு முழுதும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மரபணு பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி, அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதம்: மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்த தொடர் நடவடிக்கைகளால், நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.
Covid 19, Health Secretary, Rajesh Bhushan, Corona Virus

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : நாடு முழுதும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மரபணு பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி, அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதம்: மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்த தொடர் நடவடிக்கைகளால், நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இரண்டு வாரங்களாக தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதற்கு முன், 0.63 சதவீதமாக இருந்த நோய் பரவல், தற்போது 1.12 சதவீதமாக அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில், கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதே அதற்கு காரணம்.நாட்டின் மொத்த பாதிப்பில், 81 சதவீதம், கேரளா, மஹாராஷ்டிரா, டில்லி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது கவலை அளிக்கிறது. இதை கருத்தில் வைத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டும்.


latest tamil news



நோய் தடுப்பு விதிகளை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல், சிகிச்சை வசதிகளை தயார்படுத்துதல், பரிசோதனையை தீவிரப்படுத்துதல் என, பல்வேறு நிலைகளில், கொரோனா வழிமுறைகளை கையாள வேண்டியது கட்டாயம்.வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மட்டுமின்றி, உள்நாட்டில் ஒரே பகுதியில், அதிக எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டாலும், அவர்களது சளி மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்புவது அவசியம்.

பெருந்தொற்று சூழலை கட்டுப்படுத்த, மாநில அரசுகள் முன்னெடுத்த தீவிர நடவடிக்கைகளையும், முயற்சிகளையும், சிறிதளவும் குறைக்காமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X