கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான்: 'புது அவதாரம்' எடுத்த சீமான்

Added : ஜூன் 10, 2022 | கருத்துகள் (91) | |
Advertisement
சிவகங்கை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛அநீதி, அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன், கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான்' எனத் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக
NTK, Seeman, Krishna, Grandson, நாம் தமிழர் கட்சி, நாதக, சீமான், கிருஷ்ண பரமாத்மா, பேரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிவகங்கை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛அநீதி, அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன், கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான்' எனத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது? பா.ஜ., ஆட்சியில் ரபேல் விமானம் ஊழல் நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும்போது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த கோப்புகள் காணாமல் போனது எப்படி? நீரவ்மோடி பா.ஜ.,வுக்கு ரூ.500 கோடி கொடுத்த பின்புதான் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறியுள்ளார். திமுக ஊழலை மட்டும் பேசும் அண்ணாமலை, அதிமுக.,வின் 10 ஆண்டுகளில் கால ஊழல் குறித்து ஏன் பேசுவதில்லை?


latest tamil news


நேர்மையானவர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான்; நாங்கள் தான் சிறந்த கட்சி. நாங்கள் தான் அனைத்தையும் முதல்வர், அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று வருகிறோம். நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன்; நான் ஒரு அவதாரம். அநீதி அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன். ஜீயர்கள் திமுக அமைச்சர்கள் நடமாட முடியாது என்றார்கள் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
16-ஜூன்-202216:28:31 IST Report Abuse
மிளிர்வன் அல்லாரும் கேட்டுக்கோங்கப்பா.. பச்சைத்தமிழன் கிருஷ்ணரோட பேரனாம்.. அதாவது பச்சைத்தமிழன்னா சங்கி'ங்குறாரு.. சந்தடி சாக்குல தன்னையும் சேர்த்து..
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
16-ஜூன்-202216:22:53 IST Report Abuse
மிளிர்வன் பேசும்போது விட்டு, விட்டு, கத்துறவரு இப்போ விடாம சிரிக்க பண்ணுகிறாரே? பேராண்டிக்கு பொல்லா நினைப்புதான்..
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
16-ஜூன்-202214:38:44 IST Report Abuse
jayvee தமிழக அரசியலின் தலை சிறந்த கோமாளி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X