கள்ளக்காதல் ஜோடி தற்கொலை சின்னசேலம் அருகே பரபரப்பு

Added : ஜூன் 12, 2022 | |
Advertisement
சின்னசேலம் : சின்னசேலத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் ரமேஷ், 42; தனியார் கல்லுாரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.திருமணமாகி 24 வயதில் திருமணம் முடிந்த மகளும், 2 மகன்களும் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி


சின்னசேலம் : சின்னசேலத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் ரமேஷ், 42; தனியார் கல்லுாரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.திருமணமாகி 24 வயதில் திருமணம் முடிந்த மகளும், 2 மகன்களும் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி மனைவி ரஞ்சிதா, 28; இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.



ரமேஷ் மற்றும் ரஞ்சிதா இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், 10 நாட்களுக்கு முன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சின்னசேலம் பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள யாதவகுமார் என்பவர் வீட்டில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தினர்.இந்நிலையில் நேற்று மாலை 4:00 மணியளவில் ரமேஷ் கொசப்பாடி கிராமத்தில் உள்ள தனது உறவினருக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, நானும், ரஞ்சிதாவும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என கூறியுள்ளனர்.



இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் உறவினர்கள் இரவு 8:00 மணியளவில் சின்னசேலத்தில் ரமேஷ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பார்த்தனர். அங்கு ரமேஷ் விஷம் குடித்தும், ரஞ்சிதா துாக்குப் போட்டும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவர் உடலையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X