கிரிக்கெட் மட்டையால் அடித்து மனைவி கொலை

Added : ஜூன் 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சேலம்-குடும்ப தகராறில், கிரிக்கெட் மட்டையால் அடித்து, மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.சேலம், திருவாக்கவுண்டனுார், காந்தி ஆசிரமத்தைச் சேர்ந்த தியாகலிங்கம் மகள் தனசிரியா, 26; சேலம், முல்லை நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் கீர்த்திராஜ், 30; இருவருக்கும் மூன்றாண்டுக்கு முன் திருமணமானது. தகராறுகோவையில் தனியார் நிறுவனத்தில் கீர்த்திராஜ் பணிபுரிந்தார். சேலம்,
கிரிக்கெட் மட்டையால் அடித்து மனைவி கொலை

சேலம்-குடும்ப தகராறில், கிரிக்கெட் மட்டையால் அடித்து, மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

சேலம், திருவாக்கவுண்டனுார், காந்தி ஆசிரமத்தைச் சேர்ந்த தியாகலிங்கம் மகள் தனசிரியா, 26; சேலம், முல்லை நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் கீர்த்திராஜ், 30; இருவருக்கும் மூன்றாண்டுக்கு முன் திருமணமானது. தகராறுகோவையில் தனியார் நிறுவனத்தில் கீர்த்திராஜ் பணிபுரிந்தார். சேலம், ரெட்டிப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்தனர்.குழந்தை இல்லாத நிலையில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெற்றோர் வீட்டில் தனசிரியா வசித்தார். நேற்று முன்தினம் கீர்த்திராஜ், மனைவியை அழைத்துள்ளார்.பெற்றோர் செல்ல வேண்டாம் எனக்கூறிய நிலையில், கணவன் வீட்டுக்கு சென்றார்.அங்கு சென்ற சிறிது நேரத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த கீர்த்திராஜ், கிரிக்கெட் மட்டையால் தனசிரியாவின் தலையில் பலமாக அடித்துள்ளார்.

வழக்கு பதிவுரத்த வெள்ளத்தில் சரிந்தவரை, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். உடலை மின்விசிறியில் கட்டி தொங்க விட்டுள்ளார்.மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.பிரேத பரிசோதனையில், அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றது தெரியவந்தது.இதையடுத்து, கீர்த்திராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasansundar - Pondicherry,இந்தியா
14-ஜூன்-202217:23:49 IST Report Abuse
srinivasansundar அடேய் உன் வீரத்தை ஒரு வீர மகனிடம் காட்டு? உன்னை பற்ற தாயும் உன் மனைவியும் ஒரே இனத்தை சேர்ந்தவங்க. அதாவது உன் தாய்க்கு பின்னர் உன் மனைவியும் உன்னை பெத்த தாய்க்கு ஈடானவள் கெடுத்து கொண்டாயே உன் வாழ்க்கையை.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X