பள்ளியில் சேர்ந்தால் ரூ.1,000 பரிசு: அசத்துகிறார் அரசு பள்ளி ஹெச்.எம்.,

Added : ஜூன் 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே வீடு வீடாக சென்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர், 'பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, பிரசாரம் செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.கோவை மாவட்டம்,சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, லட்சுமணசாமி தலைமை ஆசிரியராக
பள்ளியில் சேர்ந்தால் ரூ.1,000 பரிசு: அசத்துகிறார் அரசு பள்ளி ஹெச்.எம்.,

பல்லடம்:பல்லடம் அருகே வீடு வீடாக சென்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர், 'பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, பிரசாரம் செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கோவை மாவட்டம்,சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, லட்சுமணசாமி தலைமை ஆசிரியராக உள்ளார். இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக, வீடு வீடாக பிரசாரம்செய்யும் இவர் கூறியதாவது:


இந்த ஊரில், 430 பேர் உள்ளனர். இதில், ஆரம்ப பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் மிக குறைவு. தற்போது, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 13 பேர் மட்டுமே படிக்கின்றனர்.இங்கு, பணியில் இருந்த ஒரு ஆசிரியரும் பணியிட மாற்றம் பெற்று சென்று விட்டார். தற்போது, நானே ஆசிரியர்; நானே தலைமை ஆசிரியர். இது சிறிய கிராமம் என்பதால் சேர்க்கை குறைவாக உள்ளது.


அதிக மாணவர்களை சேர்க்கும் முயற்சியாக, '1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, அறிவித்துள்ளேன். மாணவர்களை சேர்க்க முயற்சிப்பவருக்கும், இத்தொகையை வழங்குவேன்.கூடுதலாக ஓர் ஆசிரியர்மட்டும் இருந்தால், மாணவர்களை கவனிக்க உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yesappa - Bangalore,இந்தியா
14-ஜூன்-202215:39:29 IST Report Abuse
Yesappa ஸ்ட்ரென்த் கம்மி ஆச்சுன்ன ஏரி தூக்கி விடுவார்கள் . அதன் சார் பாசமா இருக்கார்
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
13-ஜூன்-202217:32:09 IST Report Abuse
David DS லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை சேர்க்கிறார். அதற்கு இப்படி ஒரு பாராட்டு, விளம்பரம். வேறென்ன சொல்ல?
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
13-ஜூன்-202217:31:25 IST Report Abuse
David DS lanjam koduthu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X