வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
![]()
|
ராஜசேகரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
![]() |
5 பேர்சஸ்பெண்ட்
இந்நிலையில் கைதி ராஜசேகரை விசாரித்த ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்