மாவட்டத்தில் தனியார் உர கடைகளில் யூரியா தட்டுப்பாடு; விவசாயிகள் தவிப்பு

Updated : ஜூன் 13, 2022 | Added : ஜூன் 13, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
விருத்தாசலம் : மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், தனியார் உர கடை உரிமையாளர்கள், டி.ஏ.பி., பொட்டாஷ் உள்ளிட்ட மற்ற உரங்களை வாங்கினால் தான், யூரியா வழங்கப்படும் என விவசாயிகளை கட்டாயப்படுத்துவதால், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட டெல்டா

விருத்தாசலம் : மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், தனியார் உர கடை உரிமையாளர்கள், டி.ஏ.பி., பொட்டாஷ் உள்ளிட்ட மற்ற உரங்களை வாங்கினால் தான், யூரியா வழங்கப்படும் என விவசாயிகளை கட்டாயப்படுத்துவதால், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.latest tamil news


மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும்; விருத்தாசலம், கம்மாபுரம், அண்ணாகிராமம், கடலுார், குறிஞ்சிப்பாடி, மங்களூர், நல்லுார் உள்ளிட்ட டெல்டா அல்லாத பகுதிகளிலும், ஆண்டு தோறும் மே, ஜூன் மாதங்களில் 2.50 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

அதன்படி, கடந்த ஒரு மாதங்களாக விருத்தாசலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், ராஜேந்திரப்பட்டினம், பெண்ணா டம் உள்ளிட்ட பகுதிகளில் நடவு பணி தீவிரமாக நடக்கிறது.நாற்று விடும் பணிக்கு, விவசாயிகள் அடி உரமாக அதிகளவு யூரியா பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில், விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா வாங்கச் சென்றால், இருப்பு இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர்.


latest tamil newsமேலும், யூரியா இருப்பு வைத்துள்ள சில தனியார் கடைகளில், பொட்டாஷ், டி.ஏ.பி., போன்ற உரங்களை வாங்கினால்தான், யூரியா கொடுப்போம் என கூறி வருகின்றனர். இதேநிலை மாவட்டம் முழுவதும் நீடிக்கிறது.இதனால், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இது குறித்து பரவளூர் விவசாயி தனவேல் கூறுகையில், நான் 6 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்துள்ளேன்.
\நடவு பணிக்கு முன் நிலத்தினை உழுது அதில் யூரியா, டி.ஏ.பி.,உரங்களை இட்டு, நடுவு பணியில் ஈடுபடுவோம்.மேலும், பயிர் பச்சை கட்டுவதற்கு அடுத்த ஒரு மாதத்தில் இரண்டு முறை யூரியா இட வேண்டும். ஆனால், தற்போது விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் யூரியா மூட்டைகளை கேட்டால், டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்களை வாங்கினால், அதனுடன் யூரியா தருகிறோம் என கூறுகின்றனர்.

மேலும், ஒரு சில தனியார் கடைகளில் ரூ.350க்கு விற்க வேண்டிய 50 கிலோ யூரியா மூட்டையை,ரூ.550க்கு விற்று கூடுதல் லாபம் பார்க்கின்றனர்.தோட்டப்பயிர்கள் மற்றும் நெல், கரும்பு போன்ற பயிர்களின் வளர்ச்சிக்கு யூரியா முக்கிய தேவை. யூரியா மூட்டை வாங்க மட்டுமே பணம் இருப்பு வைத்துள்ள நிலையில், எங்களுக்கு தற்போது தேவைப்படாத உரங்களை கட்டாயமாக வாங்கச்சொல்வது வேதனையாக உள்ளது.எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு யூரியா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
13-ஜூன்-202210:54:22 IST Report Abuse
raja கேடுகெட்ட இந்த விடியாத அரசை கொண்டு வைத்து விட்டு இப்போ புலம்ப வேண்டியது.... இனிவரும் காலம்களில் இந்த திருட்டு ஓங்கோல் கொள்ளை கூட்டத்தை தமிழர்கள் விரட்டி அடிக்கவேண்டும்....
Rate this:
Cancel
ayen - ,
13-ஜூன்-202208:32:13 IST Report Abuse
ayen நிச்சயம் கள்ள சந்தையில் கிடைக்கும். அண்ணாமலையை கூப்பிடுங்கள், உண்மை விலை வரும்.
Rate this:
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
13-ஜூன்-202217:13:54 IST Report Abuse
Chakkaravarthi Skமக்கள் தவறு செய்தால் அதன் பலனை அனுபவிக்கிறார்கள். தவறான ஆட்சியை கொண்டு வந்து விட்டோம். தண்டனை கிடைக்கிறது. வாய் திறக்காமலே தெருக்கொள்ள வேண்டியதுதான் முறை...
Rate this:
Cancel
13-ஜூன்-202205:14:54 IST Report Abuse
டாஸ்மாக் இருந்து விடியல் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X