உ.பி., முதல்வர் என்ன தலைமை நீதிபதியா?: ஓவைசி கேள்வி

Updated : ஜூன் 13, 2022 | Added : ஜூன் 13, 2022 | கருத்துகள் (59) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுபவரின் வீட்டை இடித்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த எஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி, ‛உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டார்' என விமர்சித்துள்ளார்.சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா.ஜ.,வின் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது குற்றம்
UP, Chief Minister, Chief Justice, Allahabad High Court, Asaduddin Owaisi, Slams, Demolition, உபி, முதல்வர், உயர்நீதிமன்றம், தலைமை நீதிபதி, ஓவைசி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுபவரின் வீட்டை இடித்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த எஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி, ‛உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டார்' என விமர்சித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா.ஜ.,வின் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர்களை கட்சி பொறுப்பிலிருந்து பா.ஜ., மேலிடம் நீக்கியது. ஆனாலும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் திடீரென வன்முறையும் ஏற்பட்டது. இந்த வன்முறையில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக உ.பி.,யில் 9 மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.latest tamil newsமேலும், உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் ஏற்பட்ட வன்முறையில், அம்மாவட்டத்தை சேர்ந்த ஜாவேத் முகமது என்பவர் மூளையாக செயல்பட்டதாக போலீசார் குற்றம்சாட்டினர். இந்நிலையில், ஜாவேத் முகமது வீட்டை புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. அவர் வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெறவில்லை என்றும் அதன் காரணமாகவே அந்த வீட்டை இடித்ததாகவும் பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.latest tamil newsஇந்த நிகழ்வு குறித்து எஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், ‛உ.பி., முதல்வர் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டார். அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி என அறிவிக்க முடியும். அவர்களின் வீடுகளையும் இடித்துத் தள்ள உத்தரவிட முடியும்' என்று விமர்சித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-202208:00:46 IST Report Abuse
பேசும் தமிழன் சட்டத்தை கையில் எடுத்து கல் ஏறியவர்கள் என்ன தலைமை நீதிபதியா???? வந்துட்டான் முட்டு கொடுக்க.... உங்களுக்கு எல்லாம் சர்தார் வல்லபாய் படேல் போன்ற ஆட்கள் தான் சரியாக வருவார்கள்!!!!
Rate this:
Cancel
14-ஜூன்-202207:42:07 IST Report Abuse
அருண், சென்னை அப்போ முதன்மை நீதிபதி உங்களுக்கு தெரிந்தவரா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-ஜூன்-202217:58:03 IST Report Abuse
r.sundaram இவருக்கு கண்ணும் காதும் வேலை செய்யாது போலும். நேர்மையானவராக இவர் இருந்தால் கலவரத்தை கண்டித்திருக்க வேண்டும். கலவரத்தை தூண்டியவர்களை கண்டித்திருக்க வேண்டும். மதம் மதம் எதிலும் மதம், இது மட்டுமே இவரின் குறிக்கோள். மதத்தை தாண்டி இவர் ஏன் சிந்தித்து பார்க்க மாட்டேன் என்கிறார்? இவரை போன்றவர்களே இந்தியாவின் துயரம். உண்மை என்ன வென்று தெரியாது, சொல்லாலும் புரியாது. அடுத்தவர் பேச்சை கேட்கவும் மாட்டார். இவரை ஏதில் சேர்ப்பது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X