ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திற்கு தடை: ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Updated : ஜூன் 13, 2022 | Added : ஜூன் 13, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: ‛ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உட்பட, இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைக் காட்டவோ அல்லது இந்திய பார்வையாளர்களை குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை ஒளிப்பரப்பக் கூடாது' என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.சமீபகாலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
Online, Betting Ads, Ban, ஆன்லைன், சூதாட்ட விளம்பரங்கள், தடை, மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ‛ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உட்பட, இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைக் காட்டவோ அல்லது இந்திய பார்வையாளர்களை குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை ஒளிப்பரப்பக் கூடாது' என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி பணம் மட்டுமல்லாமல் உயிரையும் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்புவதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை பிறப்பித்த உத்தரவில், ‛நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடந்து வரும் சட்டவிரோதமான பந்தயம் மற்றும் சூதாட்டம் காரணமாக பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இதை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் சூதாட்டங்கள் விளம்பரங்கள் இருக்கிறது. ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உட்பட, இந்தியாவில் இதுபோன்ற விளம்பரங்களைக் காட்டவோ அல்லது இந்திய பார்வையாளர்களை குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை ஒளிப்பரப்பக் கூடாது' என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-202203:41:49 IST Report Abuse
Fastrack கோவாவில் சொகுசு கப்பல்களில் கேசினோ நடக்கிறதே ..அரசாங்கமே தம்போலா லாட்டரி நடத்தி மகிழ்விக்கலாமே ..கிரிக்கட் பேட்டிங் அனுமதிக்கலாம் ..மது விற்பனை செய்யும்போது இதெல்லாம் என்ன பாவம் பண்ணின
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
13-ஜூன்-202218:03:16 IST Report Abuse
Raj ஆன்லைன் சூதாட்டத்தையே தடை செய்ய வேண்டியது தானே
Rate this:
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-202217:57:22 IST Report Abuse
Nancy விளம்பர துாதர்களுக்கு தண்டனை கொடுக்கணும் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X