சென்னை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு விமோசனம்! ;திருவள்ளூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

Updated : ஜூன் 13, 2022 | Added : ஜூன் 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை, 18 கி.மீட்டர் துாரம் இணைப்பு பணி, ஏழு ஆண்டுக்கு பின் துவங்கப்பட்டு உள்ளது. சென்னை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில், அரைகுறையாக நிறுத்தப்பட்ட பணி, நிறைவேறினால், திருவள்ளூரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருநின்றவூர் -

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவள்ளூர்-திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை, 18 கி.மீட்டர் துாரம் இணைப்பு பணி, ஏழு ஆண்டுக்கு பின் துவங்கப்பட்டு உள்ளது.
latest tamil news


சென்னை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில், அரைகுறையாக நிறுத்தப்பட்ட பணி, நிறைவேறினால், திருவள்ளூரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருநின்றவூர் - ரேணிகுண்டா வரை, 124 கி.மீட்டர் துாரம் ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி, 2011ம் ஆண்டு துவங்கியது.இப்பணிக்காக, 571 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரை, நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இருவழிச் சாலையாக மட்டும் மாற்றப்பட்டது.ஒப்பந்தப்படி, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையானது, திருத்தணி, திருப்பாச்சூர் வழியாக, ஐ.சி.எம்.ஆர்., அருகில் ஊத்துக்கோட்டை சாலையை கடந்து, பெரும்பாக்கம், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் தனியார் இரும்பு கம்பெனி அருகில், இணைக்கப்பட வேண்டும்.ஆனால், பல்வேறு இடையூறு காரணமாக, இப்பணி, ஐ.சி.எம்.ஆர்., பகுதியுடன் நின்று விட்டது.மண் பரிசோதனைஇதன் காரணமாக, ஏழு ஆண்டுக்கும் மேலாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, சென்னை செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகருக்குள் நுழைந்து செல்கின்றன. கனரக வாகனங்களால், நகரில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில், ஏழு ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் இருந்து, திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.இதற்காக, இரண்டு நாட்களாக, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை, சாலை அமையவுள்ள இடத்தில், மண் பரிசோதனை பணி நடைபெற்று வருகிறது.மேலும், சாலை பணி நிறைவடைந்த இடத்தில் இருந்து, ஊத்துக்கோட்டை சாலை மேல், மேம்பாலம் அமைத்து, பின் அங்கிருந்து சாலைப் பணி துவங்கப்படும் என, கூறப்படுகிறது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை பணி மேற்பார்வையாளர் ஒருவர் கூறியதாவது:திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, 18 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி துவங்கி உள்ளது.latest tamil news


எல்லை கற்கள்இதற்காக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், 205 தேசிய நெடுஞ்சாலை நிறைவடைந்த இடத்தில் இருந்து, திருநின்றவூர் வரை, 18 கி.மீ., துாரம் வரை, நான்குவழிச் சாலை இணைப்பு பணி துவங்கப்பட்டு உள்ளது.இதற்காக, இரண்டு நாட்களாக, மண் பரிசோதனை செய்து வருகிறோம். மேலும், திருவள்ளூரில் இருந்து தண்ணீர்குளம் வரை, ஏற்கனவே அளவெடுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தினை சீரமைத்து, எல்லை கற்கள் நடும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், ஓரிரு நாட்களுக்குள், சாலை அமைக்கும் பணி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
14-ஜூன்-202200:35:36 IST Report Abuse
சாண்டில்யன் பெருமாள் தரிசனத்துக்கு வசதி செய்ய வந்தார் கட்டுமரத்தின் தவப்புதல்வன் இதுதான் திராவிட மாடல் 64. FIXING THE BLAME DOESN'T FIX THE PROBLEM. CUTTING SOMEONE'S LEG DOESN'T MAKE YOU TALL. CONVINCING THE WHOLE WORLD IS UGLY DOESN'T MAKE YOU BEAUTIFUL. TELLING EVERYONE THAT THEY ARE WRONG DOESN'T MAKE YOUR LIFE RIGHT. WHEN YOU MAKE THE MAN WITHIN YOU RIGHT, THE WORLD YOU SEE OUTSIDE OF YOU WILL LOOK RIGHT.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X