நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் 10 மணி நேரம் விசாரணை| Dinamalar

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் 10 மணி நேரம் விசாரணை

Updated : ஜூன் 14, 2022 | Added : ஜூன் 14, 2022 | கருத்துகள் (4) | |
.புதுடில்லி-புதுடில்லி-'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம், அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணையை நடத்தினர். ஒன்பது மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திணறியதாக தெரிகிறது.புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'அசோசியேட்டர்
RahulGandhi,EnforcementDirectorate,NationalHeraldCase

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

.

புதுடில்லி-புதுடில்லி-'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம், அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணையை நடத்தினர்.

ஒன்பது மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திணறியதாக தெரிகிறது.புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட்' நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. கடன் நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது.


பண மோசடிஇந்தக் கடனில் இருந்து விடுபடுவதற்காக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, 'யங் இந்தியன்' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய மகனும், எம்.பி.,யுமான ராகுல் உள்ளனர்.இந்த பரிமாற்றம், பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பறிக்கும் வகையில் நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.


latest tamil news

'சம்மன்'


இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா மற்றும் ராகுலுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. இதன்படி, டில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் நேற்று ராகுல் ஆஜரானார்.காலை 11:10 மணி முதல், மதியம் 2:10 மணி வரை அவரிடம் விசாரணை நடந்தது. பின், அவருடைய கோரிக்கையை ஏற்று, மதிய உணவுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார். மீண்டும் மாலை 3:30 மணியில் இருந்து விசாரணை தொடர்ந்து நடந்தது.உதவி இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி உள்ளிட்டோர் ராகுலிடம் விசாரணை நடத்தினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியது

தொடர்பான விபரங்கள் உள்ளிட்டவை குறித்து, அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டதாக தெரிகிறது.முன்னதாக, பணப் பரிமாற்ற மோசடி சட்டத்தின் 50வது பிரிவின்படி, தன் தரப்பு வாதத்தை ராகுல் பதிவு செய்தார்.முதல் அரை மணி நேரம், சட்ட நடைமுறைகள் மற்றும் வருகைப் பதிவு போன்ற நடவடிக்கைகள் இருந்தன.

அதன்பின், இந்த விவகாரம் தொடர்பான பல கேள்வி களை அதிகாரிகள் எழுப்பினர்.பகலில் நடந்த விசாரணையின்போது, ராகுல் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அவர் அளித்த பதில்களில் அதிகாரிகள் திருப்தி அடைய வில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராகுலிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை நடந்தது. இன்றும் அவரிடம் விசாரணை தொடர உள்ளது.

சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு

- நமது டில்லி நிருபர் -அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக சோனியா, ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டதைக் கண்டித்து, அந்த அலுவலகங்கள் அருகே சத்தியாகிரக போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதற்காக, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு, ராகுல், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் புடைசூழ பேரணியாக புறப்பட்டார். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகெல், மூத்த தலைவர்கள் சிதம்பரம், ராகுலின் சகோதரியும், பொதுச் செயலருமான பிரியங்கா உள்ளிட்டோருடன் ராகுல் பேரணியாக சென்றார். அமலாக்கத் துறை அலுவலகம் உள்ள சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து, ராகுல் காரில் அமலாக்கத் துறை அலுவலகம் சென்றார்.இது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று கூறியதாவது:அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி, அமைதியான முறையில் பேரணியாக சென்று எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாக இருந்தோம். சட்டத்தை மதிக்கும் இடத்திலும், அதை காப்பாற்றும் இடத்திலும் உள்ளவர்கள் நாங்கள். ஆனால், மோடி அரசு பயந்துவிட்டது. அதனால் தான் ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து, தடுப்பு அரண்களை வைத்து தடுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, புதுடில்லியில் நேற்று நடந்த போராட்டத்தின்போது, போலீசார் தள்ளிவிட்டதில், காங்., மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு இடது பக்க விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.'ஊழலுக்கு காங்கிரஸ் ஆதரவு'

- நமது டில்லி நிருபர் -பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:கடந்த 1930ல் அசோசியேட்டட் ஜர்னல் லிட்., நிறுவனம், பத்திரிகை நடத்துவதற்காகவே துவக்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்கள் 1,500 பேர் பங்குதாரர்களாக இருந்த இந்த நிறுவனம், தற்போது ஒரு குடும்பத்தின் சொத்தாகிவிட்டது.கட்சியின் நலனுக்காக, பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட நன்கொடையை, ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கியது முறையா என்பதை, காங்., தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். சட்டத்தை விட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை; ராகுல் உட்பட.தங்களது ஊழலை மறைப்பதற்காகவும், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடியும், அழுத்தமும் தருவதற்காகவும், கட்சித் தொண்டர்களை வீதிகளில் இறக்கி போராட வைக்கின்றனர்.சோனியா குடும்பத்தின் 2,000 கோடி ரூபாய் சொத்தை காப்பாற்ற நடத்தப்படும் நாடகம் தான் இந்த போராட்டம். இதன் வாயிலாக, ஊழலுக்கு காங்கிரசின் ஆதரவு எப்போதும் உண்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X