கல்வராயன்மலையில் கோடை விழா எப்போது? ; மிகுந்த எதிர்பார்ப்பில் மாவட்ட மக்கள்| Dinamalar

கல்வராயன்மலையில் கோடை விழா எப்போது? ; மிகுந்த எதிர்பார்ப்பில் மாவட்ட மக்கள்

Updated : ஜூன் 14, 2022 | Added : ஜூன் 14, 2022 | |
கச்சிராயபாளையம்,-கல்வராயன்மலையில் இந்த ஆண்டு கோடை விழா எப்போது நடத்தப்படும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் பரவி காணப்படுகிறது.தற்போது,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கச்சிராயபாளையம்,-கல்வராயன்மலையில் இந்த ஆண்டு கோடை விழா எப்போது நடத்தப்படும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.



latest tamil news



கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் பரவி காணப்படுகிறது.தற்போது, கல்வராயன்மலை புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கல்வராயன்மலை பகுதியைச் சேர்ந்த மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புகளை முக்கிய வாழ்வாதார தொழிலாகக் கொண்டுள்ளனர். மேலும் காடுகள் சார்ந்த விறகு வெட்டுதல், தேன் சேகரித்தல், கடுக்காய் சேகரித்தல் உள்ளிட்ட சிறு தொழில்களையும் செய்து வருகின்றனர்.



இப்பகுதியைச் சேர்ந்த பெரும் பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கர்நாடகா மாநிலம், மைசூர், மான்டியா போன்ற இடங்களுக்கு எஸ்டேட் பணிகளுக்கும், கேரளா, மாநிலத்தில் செங்கல் சூளைகளிலும் பல மாதங்கள் தங்கி கூலி செய்து வருகின்றனர்.மேலும் சில தனி நபர்களின் லாபத்திற்காக இப்பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தியும், அவர்களுக்கு பண ஆசை காண்பித்து சாராயம் காய்ச்சுதல் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு செம்மரம் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.இன்றளவும் இப்பகுதியைச் சேர்ந்த பலர் ஆந்திரா மாநில சிறையில் சிக்கியுள்ளதுடன், வழக்கு விசாரணைக்காக அலைந்து வருகின்றனர்.



இதனால் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகவே மாறியுள்ளது. பல மாநிலங்களுக்குச் சென்று உழைத்தாலும் இப்பகுதி மக்களின் பொருளாதார சூழல் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.கல்வராயன்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார தேவைக்காகவும் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் அரசு பல துறைகள் சார்பில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக அரசு சார்பில் கல்வராயன் மலையில் ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.



கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன் அனைத்து துறை சார்பில் அரங்குகள் அமைத்து கண்காட்சிகளும் நடத்தப்படும்.இதனைக் காண பல்வேறு மாவட்டகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கோடை விழாவில் பங்கேற்பர். மேலும், 3 துறை அமைச்சர்கள் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பர்.இந்த கோடை விழா மூலம் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் இப்பகுதி மக்களுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.


latest tamil news



கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடை பெறவில்லை. ஜூன் மாதம் துவங்கிய நிலையிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது குறித்து அறிவிப்புகள் இது வரை வெளியிடப்படவில்லை.இதனால் இந்த ஆண்டும் கோடை விழா நடைபெறுமா என்ற சந்தேகம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் தி.மு.க., அரசின் முதல் கோடை விழா என்பதாலும், புதிய மாவட்டத்தின் முதல் விழா என்பதாலும் இந்த கோடை விழா மிக முக்கியத்துவம் பெறும். இதனால், கோடை விழா அறிவிப்பு எப்போது வரும் என மிகுந்த எதிர்பார்ப்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X