2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் ஆஜர்

Updated : ஜூன் 14, 2022 | Added : ஜூன் 14, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் இரண்டாவது நாளாக ஆஜரானார்.'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம், அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணையை நடத்தினர். 11 மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திணறியதாக
Congress, Rahul, Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் இரண்டாவது நாளாக ஆஜரானார்.



'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம், அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணையை நடத்தினர். 11 மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திணறியதாக தெரிகிறது.



இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ராகுலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னர் காங்கிரஸ் தலைமையகம் சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்திய ராகுல், பின்னர் அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார்.



latest tamil news




நிர்வாகிகள் கைது

ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் காங்கிரசார், தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-202219:27:12 IST Report Abuse
SUBBU,MADURAI ஒரு வரியில் நான் சாவர்கர் அல்ல என்று பேனர் வைத்து சினிமா டயலாக்கையெல்லாம் விசாரனையில் உளற முடியாது.இது சிபிஐ போன்ற மற்ற இன்டெலிஜன்ஸ் துறைகளில் அவர்கள் கேட்கும் கேள்விகளை கேட்டு பதில் சொல்வதை வீடியோ மற்றும் ஆடியோ ரிக்கார்டு பண்ணும் சமாச்சாரம் அல்ல. அமலாக்கத் துறை கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் ஒரு பள்ளி மாணவன் பரீட்சை எழுதுவது போல் அவர்கள் கேட்கும் கேள்வியை அவர்கள் கொடுக்கும் பேப்பரில் தன் கைப்பட ராகுல்காந்தி எழுதிகொடுக்க வேண்டும்.நேற்று சொன்னதை இன்றைக்கோ அல்லது மற்றொரு நாளிலோ மாற்றி சொல்ல முடியாது.ஏனென்றால் இவர் இப்படி தன் கைப்பட எழுதிக் கொடுப்பதுதான் நாளை சுப்ரீம் கோர்ட்டில் ஆவனமாக கொடுக்கப் படும்.
Rate this:
Cancel
A.Muralidaran - Chennai,இந்தியா
14-ஜூன்-202218:58:47 IST Report Abuse
A.Muralidaran கொரோனா என்று கூறி ஓய்வு எடுக்கும் மற்ற இருவருக்கும் எப்போது
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
14-ஜூன்-202215:54:48 IST Report Abuse
KavikumarRam ///11 மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திணறியதாக தெரிகிறது./// அதனால தான் இன்னிக்கு விசாரணைக்கு போறதுக்கு முன்னால காங்கிரஸ் தலைமையகம் சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல், எப்படியாவது போராட்டம் அப்படி இப்படி நடத்தி விசாரணையை திசை திருப்பி விட்டிருங்கன்னு சொல்லிட்டு விசாரணைக்கு போயிருக்காரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X