ஊட்டச்சத்து பெட்டக விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரிக்கை!

Updated : ஜூன் 15, 2022 | Added : ஜூன் 15, 2022 | கருத்துகள் (62) | |
Advertisement
சென்னை: ''ஊட்டச்சத்து பெட்டக விவகாரத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்தார்.உலக கொடையாளர் தினத்தை ஒட்டி, அமைச்சர் சுப்பிரமணியன் ரத்த தானம் செய்தார். மேலும், தொடர்ந்து ரத்த தானம் செய்து வரும் 61 தன்னார்வலர்களை பாராட்டி,
BJP, Annamalai, Subramanian

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''ஊட்டச்சத்து பெட்டக விவகாரத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்தார்.

உலக கொடையாளர் தினத்தை ஒட்டி, அமைச்சர் சுப்பிரமணியன் ரத்த தானம் செய்தார். மேலும், தொடர்ந்து ரத்த தானம் செய்து வரும் 61 தன்னார்வலர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: அண்ணாமலை, இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலாவதாக, ஊட்டச்சத்து மாவில், 77 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஊழல் என குற்றம் சாட்டினார்.

ஆவின் நிறுவனத்திடம், 'ஹெல்த் மிக்ஸ்' வாங்கியிருந்தால், இழப்பீட்டை தவிர்த்திருக்கலாம் என்றார். ஆவினில் 'ஹெல்த் மிக்ஸ்' தயாரிக்காத நிலையில், அவர்களிடம் எப்படி வாங்க முடியும்? தற்போது தான், அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. முடிந்தால் அவர், ஆவின் நிறுவனத்திடமிருந்து, 'ஹெல்த் மிக்ஸ்' வாங்கி தரட்டும்.அதேபோல், ஒப்பந்தம் முடியாத நிலையில், இன்னாருக்கு தான் ஒப்பந்தம் அளிக்கப்படும் என்றார்.


latest tamil newsதமிழக மருத்துவ சேவை கழகத்தின் www.tnmsc.tn.gov.in என்ற இணையளத்தில் வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதில், அண்ணாமலை தெரிவித்த 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனம், இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதேநேரம், 'பாலாஜி சர்ஜிக்கல்ஸ்' நிறுவனம் தகுதி பெற்றுள்ளது. மேலும், அண்ணாமலையின் ஆதரவு ஒப்பந்ததாரரும் தகுதி பெறவில்லை.

தற்போது தகுதி பெற்றுள்ள நிறுவனம், ஒரு பெட்டகத்திற்கு, 2,180.71 ரூபாய் நிர்ணயித்துள்ளது. கடந்த 2018ல், 1,966.91 ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்ட நிலையில், அதை விட, 9.8 சதவீதம் தான் அதிகம்.அதேபோலம், அரை கிலோ நெய், 219.52 ரூபாய்க்கு ஆவின் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. கடந்த 2018ல், 194.88 ரூபாய் என்றிருந்ததை விட, 12 சதவீதம் அதிகம். இவ்விலையை மேலும் குறைக்க, பேச்சு நடத்தப்படும்.

கர்ப்பிணிகளுக்கு ஆண்டுக்கு 11 லட்சம் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த அண்ணாமலை வருத்தம் தெரிவிப்பது, நாகரிக அரசியலுக்கு நல்லது. வருத்தம் தெரிவிக்காதபட்சத்தில் சட்ட ரீதியாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் ஹரிஹரன், மருத்துவ பணியாளர் கழக நிர்வாக இயக்குனர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202201:40:38 IST Report Abuse
அப்புசாமி பெந்ருதான் பெட்டகம் ஒட்டகம்னுட்டு. உள்ளே முச்சூடும் ஊடல். மட்டரமகம். ஆவின்ல நடப்பதோ மெகா ஊழல். இதுல இன்னும் அவிங்களுக்கு இந்த காண்டிராக்டையும் குடுக்கணுமா? ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு காலில் விழுந்து மீடியாவுல போட்டு கும்முறாய்ங்க.
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-202218:39:38 IST Report Abuse
ram நீங்க என்னதான் ஓங்கி ஓங்கி கத்துனாலும் மறைக்க முடியாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அமைச்சரே..
Rate this:
Cancel
15-ஜூன்-202218:08:32 IST Report Abuse
கண்ணன் முதலே டெண்டர் ஓபன் பண்ணுங்க. 10 நாள் ஆச்சு. நாங்களும் தெரிஞ்சுகிடறோம் யார் யாரு பேரு இருக்குன்னு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X