'பிஸ்கெட்'டில் 'பிளாஸ்டிக்': அதிகாரிகள் விசாரணை

Updated : ஜூன் 15, 2022 | Added : ஜூன் 15, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
பல்லடம்: பிஸ்கெட்டுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பொருள் குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் - அருள்புரத்தில் உள்ள பசுமை டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஒன்றில் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டில் பிளாஸ்டிக் துண்டு இருந்துள்ளது. தனது குழந்தைக்காக பிஸ்கெட் வாங்கிய அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பிளாஸ்டிக் துண்டு இருப்பது

பல்லடம்: பிஸ்கெட்டுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பொருள் குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.latest tamil news
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - அருள்புரத்தில் உள்ள பசுமை டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஒன்றில் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டில் பிளாஸ்டிக் துண்டு இருந்துள்ளது. தனது குழந்தைக்காக பிஸ்கெட் வாங்கிய அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பிளாஸ்டிக் துண்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். பல்லடம் உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர் கேசவராஜ், விசாரணை மேற்கொண்டார்.

கேசவராஜ் கூறியதாவது:
இது பிரிட்டானியா கம்பெனியின் தயாரிப்பு என்றாலும், தயாரிக்கும் உரிமையை ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள டீலர்களிடமும் பிரித்து கொடுக்கப்படுகிறது. அவ்வாறு பொங்கலுாரிலுள்ள சிவாசலபதி டீலர் மூலம் தயாரிக்கப்பட்டு கடைகளுக்கு விற்பனைக்கு சென்றுள்ளது.


latest tamil news
தவறுதலாக இதனை சாப்பிட்டிருந்தால், பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.இது தயாரிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடாகும். குறைபாடுடன் கண்டறியப்பட்ட இந்த பிஸ்கெட்டன் தயாரிக்கப்பட்ட இதர பிஸ்கெட்டுகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற சம்மந்தப்பட்ட டீலரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டீலர், மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும். அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DINAGARAN S - new delhi,இந்தியா
15-ஜூன்-202215:29:19 IST Report Abuse
DINAGARAN S ....
Rate this:
Cancel
sethuraman -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-202212:22:21 IST Report Abuse
sethuraman apdinna noodles la iruntha chemical poyiducha ippa... before maagi noodles issue 10rs/pkt after some months case closure 12rs/pkt.
Rate this:
Cancel
15-ஜூன்-202211:04:52 IST Report Abuse
மதூமிதா பிளாஸ்டிக்கை தவிர்க்க குறைக்க இப்படியும் ஒரு வழியா? குழந்தைகள் நோயாளிகள் முதியவர்கள் இதை இலவச ஊட்ட சத்தாக மாறு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X