அதிகமில்லை வெறும் ரூ.2 கோடி தான்: 10 ஆண்டில் கலெக்டர் பங்களா பராமரிப்பு செலவு

Updated : ஜூன் 15, 2022 | Added : ஜூன் 15, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
கோவை கலெக்டர் பங்களாவைப் பராமரிப்பதற்கு, கடந்த பத்தாண்டுகளில் இரண்டு கோடியே இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத் தெரியவந்துள்ளது.தமிழகத்திலேயே கலெக்டர், டி.ஆர்.ஓ., மண்டல வனப்பாதுகாவலர், டி.எப்.ஓ., கோவை சரக ஐ.ஜி., டி.ஐ.ஜி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, ஒரே பகுதியில் ஏக்கர் கணக்கில் பங்களாக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை கலெக்டர் பங்களாவைப் பராமரிப்பதற்கு, கடந்த பத்தாண்டுகளில் இரண்டு கோடியே இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத் தெரியவந்துள்ளது.

தமிழகத்திலேயே கலெக்டர், டி.ஆர்.ஓ., மண்டல வனப்பாதுகாவலர், டி.எப்.ஓ., கோவை சரக ஐ.ஜி., டி.ஐ.ஜி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, ஒரே பகுதியில் ஏக்கர் கணக்கில் பங்களாக்கள் அமைக்கப்பட்டிருப்பது கோவையில் மட்டும்தான். அதில் கோவை கலெக்டரின் பங்களா மற்றும் முகாம் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டப்பாதையிலேயே அமைந்துள்ளது.கோவை கலெக்டர் பங்களா பராமரிக்க 10 ஆண்டுகளில் ரூ2 கோடி செலவு ! ............

latest tamil news
கலெக்டர் குடும்பத்துடன் வசிக்கும் பங்களா, மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க கட்டடமாகும்.அதன் புறத்தோற்றம் மாறாத வகையில், உள்ளுக்குள் மட்டுமே பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களைப் பராமரிக்கும் பொறுப்பு, பொதுப்பணித்துறையின் கட்டடங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் வசமுள்ளது.

இந்தப் பிரிவின் சார்பில், கலெக்டர் பங்களாவுக்கு ஆண்டுதோறும் பெருமளவு தொகை செலவிடப்படுவதாகக் கணக்குக் காட்டப்படுவதாக, நீண்ட காலமாக புகார்கள் உள்ளன. தற்போது கிடைத்துள்ள தகவல்கள் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

கடந்த 2011-2012 லிருந்து 2020-2021 வரையிலான பத்தாண்டுகளில், கோவை கலெக்டர் பங்களாவைச் சீரமைக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்ற விபரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டடங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளரிடமிருந்து, இந்தத் தகவல்கள் பெறப்பட்டன.

இதில் கிடைத்துள்ள தகவல்கள், தலை சுற்ற வைப்பதாக உள்ளன. சிறப்பு பழுது பார்ப்புப் பணி என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டிலும் பல முறை இதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில், 2012-2013ல் மட்டும்தான், குறைந்தபட்சமாக 6 லட்சத்து 86 ஆயிரத்து 102 ரூபாயும், 2013-2014ல் 7 லட்சத்து 87 ஆயிரத்து 903 ரூபாயும், 2011-2012ல் 9 லட்சத்து 1230 ரூபாயும் செலவு செய்துள்ளதாக தகவல் தரப்பட்டுள்ளது.


latest tamil news
மற்ற ஆண்டுகள் அனைத்திலும் 11 லட்சம், 14 லட்சம், 19 லட்சம், 27 லட்சம், 28 லட்சம், 29 லட்சம் என்று படிப்படியாக உயர்ந்து, 47 லட்சம் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.
ராஜாமணி கலெக்டராக இருந்த காலகட்டத்தில் தான், அதிகபட்ச தொகை செலவிடப்பட்டுள்ளது. 2018-2019ல், 28 லட்சத்து 57 ஆயிரத்து 464 ரூபாயும், 2019-2020 ல், 19 லட்சத்து 8752 ரூபாயும், 2020-2021ல், 47 லட்சத்து 16 ஆயிரத்து 621 ரூபாயும் செலவு செய்துள்ளதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில், கடந்த பத்தாண்டுகளில் 55 முறை கோவை கலெக்டர் பங்களா மற்றும் முகாம் அலுவலகத்தைப் பராமரிக்கவும், பழுது பார்க்கவும் என இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 183 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆறாண்டுகளாக யாருமே குடியிருக்காமல் பழுதடைந்த கோவை மேயர் பங்களாவைச் சீரமைக்க, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது, சமீபத்தில் பெரும் விவாதப் பொருளானது.

வெறும் பத்து லட்ச ரூபாய்க்கே, அழகான பசுமை வீடுகள் கட்டப்படும் நிலையில், கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இரண்டு கோடி ரூபாய்க்கு அப்படி என்னதான் அங்கு பணிகள் நடந்தன என்பது புரியாத புதிராக உள்ளது. எதை எதையோ விசாரிக்கும்லஞ்ச ஒழிப்புத்துறை, இதைக் கொஞ்சம் விசாரித்தால் நல்லது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
15-ஜூன்-202213:56:06 IST Report Abuse
Vena Suna இதே போல ஒவ்வொரு கலெக்டரையும் நோண்ட வேண்டும்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
15-ஜூன்-202213:08:42 IST Report Abuse
Suri இதில் பீசப்பிக்கு எவ்ளோ பங்கு போச்சு?? எல்லாம் அடிமை ஆட்சி காலத்தில் தானே?? அதுல பங்கு போட்ட பணத்துல தான் வானதி தேர்தல் நிகழ்வுகள் எல்லாம் களேபரமா நடந்தது என்று வேற கூடுதல் தகவல்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
15-ஜூன்-202213:07:15 IST Report Abuse
R.RAMACHANDRAN லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ளவர்கள் ஒன்றும் சாத்தியவான்கள் அல்ல.
Rate this:
பிடிகிட்டாபுள்ளி - எத்தியோப்பியா,மங்கோலியா
15-ஜூன்-202218:10:21 IST Report Abuse
பிடிகிட்டாபுள்ளிஅப்படீன்னா... லோக்பால் அமைச்சுடலாமே... எட்டாண்டு சாதனையில் அதை சேர்த்துக்கலாமே...அன்னா ஹசாரேயும் அதைத்தானே கூவுகிறார்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X