பாதுகாப்பு படையில் சமரசம் வேண்டாம்: ராகுல்| Dinamalar

பாதுகாப்பு படையில் சமரசம் வேண்டாம்: ராகுல்

Updated : ஜூன் 15, 2022 | Added : ஜூன் 15, 2022 | கருத்துகள் (20) | |
புதுடில்லி: ‛அக்னிபாத் திட்டத்தின் மூலம் நமது பாதுகாப்பு படைகளின் கண்ணியம், மரபுகள், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும்' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.இந்திய ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக மத்திய அரசு ‛அக்னிபாத்' என்னும் குறுகிய கால 4 ஆண்டுகள் ராணுவ சேவை திட்டத்தை அறிவித்தது.
Agnipath Scheme, Stop Compromising, Rahul, Rahul Gandhi, Congress, BJP, அக்னிபாத், பாதுகாப்பு படை, சமரசம், ராகுல், காங்கிரஸ், பாஜக, பாஜ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ‛அக்னிபாத் திட்டத்தின் மூலம் நமது பாதுகாப்பு படைகளின் கண்ணியம், மரபுகள், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும்' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.



இந்திய ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக மத்திய அரசு ‛அக்னிபாத்' என்னும் குறுகிய கால 4 ஆண்டுகள் ராணுவ சேவை திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் மூலம் இந்தியாவின் மொத்த ராணுவ வீரர்களின் பணி நியமனத்தில் 25% பேரை ஒப்பந்த முறையில் மத்திய அரசு பணியமர்த்த உள்ளது. இதன் மூலம் முப்படையிலும் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக 45 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளனர்.



latest tamil news


மத்திய அரசு அறிவித்த ‛அக்னிபாத்' திட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறுகையில், ‛இந்தியா இரண்டு முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, அக்னிபாத் திட்டம் நமது ராணுவப் படைகளின் செயல்பாட்டுத் திறனை குறைக்கிறது. நமது படைகளின் கண்ணியம், மரபுகள், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும்' என விமர்சித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X