கந்து வட்டி தொடர்பாக 124 புகார்: டிஜிபி அறிக்கை

Updated : ஜூன் 15, 2022 | Added : ஜூன் 15, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பாக 124 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கந்து வட்டிபுகார்கள் தொடர்பாகஒரு வாரத்தில் 124 புகார் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. 22 பேரிடம் பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் ஆவணங்கள் என 40 லட்சம்

சென்னை: தமிழகம் முழுவதும் கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பாக 124 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கந்து வட்டிபுகார்கள் தொடர்பாகஒரு வாரத்தில் 124 புகார் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. 22 பேரிடம் பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் ஆவணங்கள் என 40 லட்சம் மதிப்புள்ள புரோநோட்டுகள் , பத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகளும், நாமக்கல்,சேலம் மாநகரில் தலா 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 89 புகார் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 32 கந்து வட்டி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


latest tamil news



கடந்தசில தினங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் புவனகிரியில் கந்து வட்டி கொடுமை காரணமாக போலீஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கந்து வட்டி குறித்த புகார்கள் மீதான வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202211:01:05 IST Report Abuse
ஆரூர் ரங் அரசின் கண்முன்னாலேயே கோயம்பேடு போன்ற மார்க்கெட்களில் கந்துவட்டி மீட்டர் வட்டி கொடி கட்டி👹 பறக்கிறது.( காய்கறிகள் பழங்களின் விலை விண்ணைத் தாண்டி போக இதுதான் காரணம்). கசக்கிப் வாழும் உடன்பிறப்புகள் மீது எந்த சட்டமும்😳 பாயாது.
Rate this:
Cancel
16-ஜூன்-202208:27:10 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam இன்றும் கந்துவட்டி தொழில் அமோகமாக தொடர்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் கொடுக்க தயங்குவது பாதுகாப்பு இன்மையே
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-ஜூன்-202206:26:09 IST Report Abuse
Mani . V சரி, சரி நீங்க டீ குடிக்கப் போங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X