ஐ.பி.எல் உரிமத்தால் 1.5 கோடி சந்தாதார்களை இழக்கும் டிஸ்னி ?

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஐ.பி.எல் தொடருக்கான டிஜிட்டல் உரிமத்தை தக்க வைக்க தவறியதால், டிஸ்னி ஸ்டார் குழுமம் 1.5 கோடி சந்தாதரர்களை இழக்க கூடுமென தகவல் வெளியாகி உள்ளது. வால்ட் டிஸ்னியின் வீடியோ ஸ்டீரிமிங் இந்திய பதிப்பான , டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், தற்போது சுமார் 5 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் 48,390 கோடி ரூபாய்க்கு ஏலம்
ஐ.பி.எல்,ஒளிபரப்பு, டிஜிட்டல், ஏலம்,டிஸ்னி பிளஸ், வியாகாம், சந்தாதாரர்கள்


ஐ.பி.எல் தொடருக்கான டிஜிட்டல் உரிமத்தை தக்க வைக்க தவறியதால், டிஸ்னி ஸ்டார் குழுமம் 1.5 கோடி சந்தாதரர்களை இழக்க கூடுமென தகவல் வெளியாகி உள்ளது.வால்ட் டிஸ்னியின் வீடியோ ஸ்டீரிமிங் இந்திய பதிப்பான , டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், தற்போது சுமார் 5 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் 48,390 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. டிவி ஒளிபரப்பு 23,575 கோடிக்கு, டிஸ்னி ஸ்டார் குழுமம் கைப்பற்றி உள்ளது. ஆனால் 2023 முதல் 2027 வரையிலான, அடுத்த 5 சீசன்களுக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.23,758 கோடிக்கு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றி உள்ளது. டிஜிட்ட்ல் உரிமத்தில் அதிக தொகைக்கு ஏலம் சென்றிருப்பது இதுவே முதன்முறையாகும்.


latest tamil newsஇதன் மூலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஐ.பி.எல் போட்டிகள் ஒளிபரப்பானாலும், ஹாட்ஸ்டார் தளத்தில் அதனை நேரடியாக ஒளிபரப்ப இயலாது. இதுவரை டிஜிட்டல் ஒளிபரப்பை கையில் வைத்திருந்த ஸ்டார் குழுமத்துக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 2024ம் ஆண்டுக்குள் 23 கோடி முதல் 26 கோடி சந்தாதாரர்களை சென்றடைய நிர்ணயித்துள்ள இலக்கிற்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடுமென கூறப்படுகிறது.

டிஸ்னி ஸ்டார் குழும தலைவர் ரெபேக்கா காம்ப்பெல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்ற தளங்களில் கிரிக்கெட் உரிமங்களை தவிர, சேனல்களுக்கான அசல் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. நீண்ட கால மதிப்பை மையமாக வைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட ஏலங்களை நாங்கள் செய்தோம். அதனை பாதுகாக்க தேவையான விலை கொடுக்கப்பட்ட டிஜிட்டல் உரிமைகளைத் தொடர வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளோம்.

ஐ.சி.சி மற்றும் பிசிசிஐ நடத்தும் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமங்கள், 2023 மற்றும் 2024 சீசன்களில் நடக்கும் பிற கிரிக்கெட் உரிமங்களை தொடர உள்ளோம். புரோ கபடி லீக், ஐ.எஸ்.எல் கால்பந்து மற்றும் விம்பிள்டன், பிரிமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஒளிபரப்பு உரிமத்தை வைத்துள்ளோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


ஒட்டுமொத்த டிஸ்னியின் ஸ்டீரிமிங் கட்டண சந்தாதாரர்களில், 36.4 சதவீதம் பங்கை, ஹாட்ஸ்டார் கொண்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஏப்ரலில் 13.77 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். டிஸ்னி பிளஸ் வளர்ச்சியில் ஹாட்ஸ்டாரின் பங்கு பாதியளவு கொண்டுள்ளது. சராசரி வருமானத்தை வைத்து ஒப்பிடுகையில், டிஸ்னி பிளஸை, ஹாட்ஸ்டார் வருமானம் குறைவாகவே உள்ளது.

அதாவது ஒரு சந்தாதாரர் மூலம் ஒரு அமெரிக்க டாலருக்கு குறைவாக வருமானமே கிடைக்கிறது. டிஸ்னி பிளஸ் மூலம் 6.32 டாலர் வருமானமாக கிடைக்கிறது. ஒட்டுமொத்த சராசரியாக டிஸ்னிக்கு மாதம் ஒன்றிற்கு 4.35 டாலர் வருவாயாக கிடைக்கிறது. இதுவே ஹாட்ஸ்டார் இல்லாமல், 6.33 டாலராக இருக்கும்.

ஐ.பி.எல் ஏலத்தை தாண்டி, 2024க்குள் 23 முதல் 26 கோடி சந்தாதாரர் எண்ணிக்கையை எட்டுவோமென நம்பிக்கை இருப்பதாக டிஸ்னி கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஜூன்-202214:06:26 IST Report Abuse
Vena Suna ஒன்னும் ஆகாது. கிரிக்கெட் ஆர்வலர்கள் கம்மி ஆகி வருகிறார்கள். நல்ல பாடல் நிகழ்ச்சிகளுக்கு தான் இப்போ மதிப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X