மரக்காணம்,-மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் இறந்தது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவருக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தைச் சுற்றிலும் இரும்பு கம்பி வேலி அமைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வழி தவறி, கிராமத்திற்குள் வந்த ஆண் புள்ளி மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியுள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்த மான், சுந்தர் என்பவர் நிலத்தில் உள்ள இரும்பு கம்பி வேலியில் சிக்கி, கழுத்தில் கம்பிகள் குத்தியதில் அதே இடத்திலேயே இறந்தது.நேற்று காலை, வனத்துறையினர் இறந்த புள்ளிமானை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.