வாஷிங்டன்:பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் 2002ல் துவக்கப்பட்ட விவேகானந்தா யோகா பல்கலை, உலகின் முதல் யோகா பல்கலை என்ற பெருமை உடையது. இதன் வேந்தராக எச்.ஆர். நாகேந்திரா பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர் வளாகத்தின் முதல் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில், 23 பேர் முதுகலை பட்டம் பெற்றனர்.
அப்போது, வேந்தர் நாகேந்திரா கூறியதாவது:அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் யோகா பல்கலை வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக, நியூயார்க் நகரில் வசிக்கும் இந்தியர் பிரேம் பண்டாரியிடம் பேசி வருகிறோம். அமெரிக்காவில் யோகா பயிற்சியாளர்கள், ஆசிரியர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிதான் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.