காஷ்மீரில் தயாராகிறது வாக்காளர் பட்டியல்

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | |
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் வாக்காளர் வரைவுப் பட்டியல் தயார் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.'ஆக., 31க்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதன் பின் இங்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் வாக்காளர் வரைவுப் பட்டியல் தயார் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.



latest tamil news



'ஆக., 31க்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதன் பின் இங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை பணி முடிவடைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, ஜம்முவில் கூடுதலாக ஆறு சட்டசபை தொகுதிகளும், காஷ்மீரில் ஒரு தொகுதியும் சேர்க்கப்பட்டன.


latest tamil news



இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.இதற்கு அடுத்த கட்டமாக, வாக்காளர் வரைவு பட்டியலை தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.

ஓட்டுச்சாவடிகளின் மறுசீரமைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் இம்மாதம் 30க்குள் முடியும் என கூறப்படுகிறது. இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் ஆக., 31க்குள் வெளியிட பணிகள் நடந்துவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X