தமிழகத்தில் சினிமா மாடல் ஆட்சி; பா.ஜ., அண்ணாமலை கிண்டல்

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
மதுரை : ''தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு சினிமா மாடல் ஆட்சி நடக்கிறது,'' என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக பேசினார். மதுரையில் நடந்த மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க.,வின் ஓராண்டு ஆட்சி காலத்தை 'திராவிட மாடல்' என பெருமை பேசிக்கொண்டு வருகின்றனர். ஆனால் நடப்பது 'சினிமா மாடல்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மதுரை : ''தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு சினிமா மாடல் ஆட்சி நடக்கிறது,'' என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக பேசினார்.



latest tamil news



மதுரையில் நடந்த மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க.,வின் ஓராண்டு ஆட்சி காலத்தை 'திராவிட மாடல்' என பெருமை பேசிக்கொண்டு வருகின்றனர். ஆனால் நடப்பது 'சினிமா மாடல்' ஆட்சி. சம்மந்தமே இல்லாமல் பள்ளி, போலீஸ் ஸ்டேஷன் என முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.



ஆனால் அவர் செல்வதற்கு முன்பே அந்த இடம் ஒரு மினி 'சூட்டிங் ஸ்பாட்' ஆக மாறி விடுகிறது.அமைச்சர் மூர்த்தியிடம் உள்ள பத்திரப் பதிவுத் துறையில் காலை ஒரு அதிகாரி மாற்றப்பட்டால் மாலை மீண்டும் அதே இடத்திற்கு வந்து விடுகிறார்.அமைச்சர் தியாகராஜனிடம் யாரும் கேள்வியே கேட்க முடிவதில்லை.


latest tamil news



பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டுவர கூடாது என்கிறார். ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி., நிலுவையை முழுமையாக மத்திய அரசு வழங்கிய பின்னரும் எவ்வளவு நிலுவை உள்ளது என தெரியவில்லை என உளறுகிறார். விசாரிக்கிறோம் என்ற பெயரில் ஓராண்டில் 21 குழுக்கள் அமைத்தது தான் தி.மு.க.,வின் சாதனை.இதுவரை என் மீது ரூ.620 கோடி மதிப்பில் மான நஷ்டஈடு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.



ஆனாலும் தி.மு.க.,வின் ஊழலை தொடர்ந்து தட்டிக்கேட்பேன். மதுரை ஆதீனத்தை தி.மு.க., சீண்டினால் மதுரை மக்களே தக்க பதிலடி கொடுப்பர்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
16-ஜூன்-202212:28:34 IST Report Abuse
அம்பி ஐயர் ஒரு வருஷத்துல முப்பத்தேழு குழுக்கள் கண்டது தான் சாதனை..... குழுக்கள் மாடல் அரசாங்கம்....
Rate this:
Cancel
Madhumohan - chennai,இந்தியா
16-ஜூன்-202211:51:34 IST Report Abuse
Madhumohan ,,,,
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
16-ஜூன்-202211:38:23 IST Report Abuse
TRUBOAT கன்னட நடிகர் எங்கள் நடிப்பு சூறாவளி சிந்தனை சிற்பி மலை அவர்கள் நடிப்பு செமக்கலக்கல். சிங்கம்னு உறுதி படுத்திட்டாரு..... நம்ம பவர் ஸ்டாருக்கே போட்டியா நடிச்சிருக்காரு.
Rate this:
raja - Cotonou,பெனின்
16-ஜூன்-202212:00:26 IST Report Abuse
rajaபவர் ஸ்டாரு யாரு கேடுகெட்ட விடியளுன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச அந்த விடியா மூஞ்சி தானே........
Rate this:
Raa - Chennai,இந்தியா
16-ஜூன்-202214:23:35 IST Report Abuse
Raaமலை பற்றி பயம் வந்த இப்படித்தான் சிலர் சம்பந்தம் இல்லாம உளறுவர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X