அவிநாசி : 'விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வழிமுறையில் மாற்றம் அவசியம்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்தின் மொத்த பரப்பான, 11.65 லட்சம் ஏக்கரில், 4.54 லட்சம் ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது என்பது, மாவட்ட நிர்வாகத்தின் கணக்கு. மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில், 30 சதவீதம் பேர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர்.தென்னை, வாழை, பருத்தி, நிலக்கடலை, சோளம், மக்காசோளம், வெங்காயம், தக்காளி, எள் மற்றும் பலவகை காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
![]()
|
திட்டங்களுக்கு பஞ்சமில்லை
விவசாய தொழிலை மேம்படுத்த, விவசாயிகளுக்கான வருமானத்தை உயர்த்த, பயிர் சுழற்சி, பயிர் பரவலாக்கல் தொழில்நுட்பம், நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம், மானாவாரி நில மேம்பாடு, நீடித்த வறட்சி நில வேளாண்மை, கூட்டுப்பண்ணையம், நுண்ணீர் பாசனம், பசுமை உரம், உயிர் உரம், இயற்கை உர வேளாண்மை, ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என, பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.ஆனால், விளைவிக்கப்படும் பயிர்களுக்கு உரிய விலையில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கம்.விலை நிர்ணயம்
![]()
|
அதிகரிக்க வேண்டும்
நஷ்டம் தவிர்க்கலாம்
சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர், களஞ்சியம் விவசாயிகள் சங்கம் :விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் என்பது, பெரும்பாலும் இடைத்தரகர்கள் மூலம் தான் நடக்கிறது; 'சிண்டிகேட்' அமைத்து செயல்படுகின்றனர். இதனால், விவசாய விளைபொருட்களுக்கு சரியான விலை, கிடைப்பதில்லை.அரசின் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ஏல மையங்களில், விளைபொருட்களை இருப்பு வைத்து, ஏல விற்பனைக்கு கொண்டு வர தேவையான கிடங்கு வசதி இருந்தும், அவை பயனற்று கிடக்கின்றன;
பல இடங்களில் கட்டப்பட்ட கிடங்குகள், திறப்பு விழா காணாமலேயே உள்ளன.விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல், அவற்றை சாலையில் கொட்டும் நிலையை பல இடங்களில் பார்க்க முடியும். மேலை நாடுகளில் உள்ளது போன்று, எந்ததெந்த கால கட்டத்துக்கு, எந்தெந்த விளைபொருட்கள், எந்த அளவிற்கு தேவை என்ற சந்தை நிலவரத்தை துல்லியமா கணக்கிட்டு அகற்கேற்ப பயிர் மாற்று முறை திட்டத்தை அமல்படுத்தினால், விளைபொருட்களுக்கு சீரான விலை கிடைக்கும்.