ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை மீண்டும் அமல்; 46 தெருக்களில் கொரோனா தொற்று

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: சென்னையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில், 46 தெருக்களில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் வீடுகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவர்கள் வீடுகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில், 46 தெருக்களில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் வீடுகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவர்கள் வீடுகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே, அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.latest tamil news
சென்னையில், கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிரிக்க துவங்கியுள்ளது. கடந்த மாதம் வரை, தினசரி பாதிப்பு எண்ணிக்கை, 50க்கு கீழ் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து, தினசரி பாதிப்பு 200ஐ நெருங்கி வருகிறது.


அதிகரிப்பு


குறிப்பாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் பாதிக்கப்படுவது, பணி செய்யும் இடங்களில் பாதிப்பு உள்ளிட்டவற்றால், ஒமைக்ரான் பிஏ4 மற்றும் பிஏ5 வகை கொரோனா வேகமாக பரவ துவங்கியுள்ளது.சென்னையில் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பணி, தொழில், படிப்பு நிமித்தமாக, தினமும் சென்னைக்கு வந்து செல்வதால், அங்கும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு காரணங்களுக்காக, மக்கள் சென்னைக்கு வந்து செல்வதால், சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில், மூன்று நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள தெருக்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்குவது, அவர்கள் வெளியே சுற்றாமல் தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 46 தெருக்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த, மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கூறினார்.


latest tamil news
ஆலோசனை கூட்டத்திற்குப் பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
சென்னையில் நேற்று முன்தின நிலவரப்படி, 781 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில், 684 பேர் வீடுகளிலும், 59 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். மேலும் 38 பேர் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் உயிர் பாதிப்பு இல்லாமல், மிதமான தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில், மூன்று பேருக்கு மேல் தொற்று பாதித்த 46 தெருக்களிலும், ஐந்து பேருக்கு மேல் தொற்று பாதித்த ஆறு தெருக்களிலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இரட்டிப்பு


தொற்று பாதித்தவர்களின் வீடுகளை எளிதில் அடையாளம் கண்டு, அவர்கள் வெளியே செல்லாமல் தடுக்க, வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தினமும், 2,500 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் அந்த எண்ணிக்கை இரட்டிப்பு ஆக்கப்பட்டு, தினமும், 5,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சியின் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மண்டலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மண்டல அளவில் கூட்டம் நடத்தி, தொற்று பரவலை தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு வட்டாரத்திற்கு ஒரு இடம் என, மூன்று வட்டாரங்களில், தலா 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள் துவங்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் 40 லட்சம் பேர் முதல் தவணையும், 1.15 கோடி பேர் இரண்டாம் தவணையும் கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர். மேலும் 60 சதவீதம் பேர் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடாமல் உள்ளனர். பொதுமக்கள், கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களுக்காக காத்திருக்காமல், அருகில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
16-ஜூன்-202216:25:38 IST Report Abuse
Neutrallite செயற்கை நுண்ணறிவு (AI) ன்னு ஒன்னு இருக்கு. இணையத்தில் செய்திகள் வகைப்படுத்த...ஏன் சில செய்தி துளிகளை wire feed ல இருந்து உருவாக்கவும் இது பயன் படுது...அந்த AI கிட்ட இந்த செய்தியை குடுத்திருந்தா விடியளோட ஸ்டிக்கர் ஓட்றதுன்னு நெனச்சிருக்கும்...நடுவுல "ஒரே குடும்பத்தில் இருந்து" ன்னு வேற வருதா, தலைப்பும் கன பொருத்தம்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
16-ஜூன்-202210:57:49 IST Report Abuse
duruvasar "கொராணா கொன்றான்" ஸ்டாலின் ஆட்சியில் கொராணாவா? மோடியின் சதியா? சுகாதார துறை செயலரை மாற்றி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த இந்த செயல்படும் அரசை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜூன்-202209:09:20 IST Report Abuse
Sampath Kumar பரவலுக்கு முக்கிய கரணம் ... தான் அவர்கள்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X