மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு புறக்கணிக்கிறது: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
மாமல்லபுரம்-''மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை, தமிழக அரசு நிறைவேற்றாமல் புறக்கணிக்கிறது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பர்லா குற்றஞ்சாட்டினார்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சி, உய்யாலிகுப்பம் பகுதி மீனவர்களை, நேற்று அவர் சந்தித்தார்; அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.பாலாற்று முகத்துவார பகுதி மணல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாமல்லபுரம்-''மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை, தமிழக அரசு நிறைவேற்றாமல் புறக்கணிக்கிறது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பர்லா குற்றஞ்சாட்டினார்.



latest tamil news




செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சி, உய்யாலிகுப்பம் பகுதி மீனவர்களை, நேற்று அவர் சந்தித்தார்; அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.பாலாற்று முகத்துவார பகுதி மணல் அடைவை துார் வாருவது உள்ளிட்ட கோரிக்கைகளை, மீனவர்கள் எடுத்துரைத்தனர்.மத்திய அமைச்சர் ஜான் பர்லா, ''மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமரின் அனைவருக்கும் வீடு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு, தொழில் கடன் உள்ளிட்ட நல திட்டங்கள், உங்களுக்கு கிடைத்துள்ளதா?'' என கேட்டார்.

மீனவர்கள், 'ஸ்மார்ட் ரேஷன் அட்டை மட்டுமே பெற்றோம். 300 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் 50 குடும்பங்களுக்கே வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன' என்றனர்.தொடர்ந்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பர்லா பேசியதாவது:பிரதமர் மோடி, அனைத்து மக்களுக்காகவும் 24 மணி நேரமும் உழைக்கிறார். மத்திய அரசு, அனைவருக்கும் வீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. மீனவ மக்கள், இதை பற்றி அறியாமல் உள்ளனர்.


latest tamil news




இத்தகைய திட்டங்களை, பா.ஜ., ஆளும் மாநில அரசு, மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, மாநில அரசு தயங்குகிறது.எம்.எல்.ஏ.,க்களை தேர்ந்தெடுத்துள்ள நீங்கள், மத்திய அரசின் திட்டங்களை எங்களுக்கு நிறைவேற்றாதது ஏன் என, அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள்.

நல்ல மரம் வளர்த்தால்தான், நல்ல பழங்கள் கிடைக்கும்; தீய மரமானால், கிடைப்பதும் தீயதுதான்.உங்கள் குறைகளை கேட்கவே, பிரதமர் மோடி என்னை, தமிழகம் அனுப்பினார். நீங்கள் கூறியதை அவரிடம் தெரிவிப்பேன். உங்கள் பகுதி வளர்ச்சியில், நாங்கள் கவனம் செலுத்துவோம். இவ்வாறு, அமைச்சர் ஜான் பர்லா பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஜூன்-202214:55:13 IST Report Abuse
Ramesh Sargam மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முதலில் எதிர்க்கும், புறக்கணிக்கும். ஆனால், திட்டங்கள் நிறைவடைந்து, செயல்பாட்டுக்கு வந்தபின், முதலில் 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொள்வது இதே தமிழக அரசு.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
16-ஜூன்-202212:27:07 IST Report Abuse
அம்பி ஐயர் விடியா அரசில் இதெல்லாம் சாதாரணமப்பா....
Rate this:
Cancel
VIDHURAN - chennai,இந்தியா
16-ஜூன்-202212:12:33 IST Report Abuse
VIDHURAN அதற்கு தான் ஒரு திமுக கூட்டணி கட்சி பிரமுகர் கேட்டாரே? எல்லாம் எங்களிடம் இருந்து வசூலித்த வரிப்பணம் தானே என்று அதனால் தான் மத்திய அரசு(சாரி ஒன்றிய அரசுடைய )திட்டங்களை புறக்கணிக்கின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X