மேலும் ஒரு யோகா பல்கலை அமெரிக்காவில் துவங்க திட்டம்

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன் : பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவின் பெங்களூரில் 2002ல் துவக்கப்பட்ட விவேகானந்தா யோகா பல்கலை, உலகின் முதல் யோகா பல்கலை என்ற பெருமை உடையது. இதன் வேந்தராக எச்.ஆர். நாகேந்திரா பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர் வளாகத்தின் முதல்


வாஷிங்டன் : பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவின் பெங்களூரில் 2002ல் துவக்கப்பட்ட விவேகானந்தா யோகா பல்கலை, உலகின் முதல் யோகா பல்கலை என்ற பெருமை உடையது. இதன் வேந்தராக எச்.ஆர். நாகேந்திரா பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர் வளாகத்தின் முதல் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில், 23 பேர் முதுகலை பட்டம் பெற்றனர்.



latest tamil news



அப்போது, வேந்தர் நாகேந்திரா கூறியதாவது:அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் யோகா பல்கலை வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக, நியூயார்க் நகரில் வசிக்கும் இந்தியர் பிரேம் பண்டாரியிடம் பேசி வருகிறோம். அமெரிக்காவில் யோகா பயிற்சியாளர்கள், ஆசிரியர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிதான் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
16-ஜூன்-202218:02:35 IST Report Abuse
Samathuvan யோகா என்ற பெயரில் கார்ப்பரேட் ஆசாமிகள் தின்று கொழுத்துதான் மிச்சம்.
Rate this:
Cancel
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
16-ஜூன்-202218:01:07 IST Report Abuse
Ravi Chandran பொதுவாக இந்தியர் நடுநிலையாளராக சிந்திப்பது இல்லை. எப்படியோ தனது மனதுக்கு சார்ந்த ஒரு சித்தாந்த ரீதியில் தான் முடிவு எடுப்பார்கள்
Rate this:
Cancel
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
16-ஜூன்-202217:58:47 IST Report Abuse
Ravi Chandran ;;;;;
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X