ஆளுங்கட்சியானதும் ஏன் எதிர்ப்பு? தி.மு.க.,வுக்கு எம்.எல்.ஏ.,வானதி கேள்வி

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (60) | |
Advertisement
கோவை: செவிலியர் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மீதான, தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என, தி.மு.க., அரசுக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2015ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்தும் மேற்பட்ட செவிலியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: செவிலியர் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மீதான, தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என, தி.மு.க., அரசுக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.latest tamil news
கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2015ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்தும் மேற்பட்ட செவிலியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த 7ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை தி.மு.க., அரசு கைது செய்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டம் நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் ஆதரவளித்தார். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, போராடிய செவிலியர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டுள்ளது.

அதேபோல, பொதுவினியோகத் திட்டத்தை செயல்படுத்த தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 7ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news
அவர்களுடன் பேச்சு நடத்தாமல், வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் கிடையாது என, தொழிலாளர் விரோதப் போக்குடன் தி.மு.க., அரசு நடந்து கொள்கிறது. தங்களின் தேர்தல் அறிக்கையை, முதல்வரும் அமைச்சர்களும் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.

போராட்டம் நடத்துவோர் மீது அடக்குமுறையை ஏவாமல், சம்பளப் பிடித்தம் போன்ற தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடிக்காமல், பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jose Varghese - Columbus,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202218:19:27 IST Report Abuse
Jose Varghese எதிர்க்கட்சியாக இருந்த போது பா.ஜ. க காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை ஒட்டி எவ்வளவு போராட்டங்கள் செய்தார்கள்? இப்போது?
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-202219:52:19 IST Report Abuse
Sivramkrishnan Gkஉலகெங்கிலும் பெட்ரோல், டீசல், காஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நீங்கள் இருக்கும் அமெரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களில் பெட்ரோல், காஸ் இரண்டும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. நீங்கள் பாஜக போராட்டம் பற்றி எப்படி பேசலாம்....
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202220:01:45 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN,..... வருடத்துக்கு இத்தனை சிலிண்டர்கள்தான் என்று நிர்ணயம் செய்யப்பட்டதைத்தான் பிஜேபி எதிர்த்தது ..... ஆ.ராசா அப்போது ஒரு எம்.பி.யாக எத்தனை சிலிண்டர்கள் பயன்படுத்தினார் என்று கூட தகவல் பெறப்பட்டது ........
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜூன்-202214:15:10 IST Report Abuse
Sampath Kumar ஆத்தா நீக்க தீ மு கவை எதிர்ப்பதை தவிர வேற எதையாவது செயுங்க உங்க தொகுதி மக்களுக்கு புனியமாக போகட்டும் உங்க ஜி தேர்தல் வாக்குறுதிகளை எத்தனையோ அழிவிட்டாரு எத்தனை செய்தரு ? முடிந்தால் அவரை பொய் கேளுங்க
Rate this:
சங்கர் - நான்மாடக் கூடல்,இந்தியா
16-ஜூன்-202218:03:31 IST Report Abuse
சங்கர்உன்னுடைய "டிராவிட மாடல்(?)" தமிழறிவு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த "டமில்" வளர்க்கத்தான் இந்தி வேண்டாம் என்ற போராட்டம் போலிருக்கிறது....
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
16-ஜூன்-202218:37:57 IST Report Abuse
Neutralliteதாத்தா நீங்க தி மு க வை ஆதிர்ப்பதை தவிர வேற ஏதாவயது செய்யுங்க. இந்த நாட்டு மக்களுக்கு புண்ணியமாக போகட்டும். உங்க மண்ணு மூட்டை தேர்தல் வாக்குறுதிகளை எத்தனையோ அள்ளிவிட்டாரு, எதை செய்தார்? முடிந்தால் அவரை பொய் கேளுங்க......
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
16-ஜூன்-202213:37:36 IST Report Abuse
Ramamurthy N தேர்தல் அறிக்கையை இன்னுமா நம்புறீங்க? பாஜக கூட தான் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்றார்கள், 8 வருடம் கழித்து இப்போது ஒன்னரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு தருவோம் என்கிறார்கள். இதெல்லாம் அரசியலில் சர்வ சாதாரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X