உண்மையை அண்ணாமலை பேச ஆரம்பிச்சால் என்னாவது?| Dinamalar

உண்மையை அண்ணாமலை பேச ஆரம்பிச்சால் என்னாவது?

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (20) | |
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:தினமும், தன் பெயர் நாளிதழ்களில் வரவேண்டும் என்பதற்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏதாவது கூறுகிறார், அறிக்கை விடுகிறார். நாளிதழ்களை முழுமையாக படித்து, உண்மை தன்மையை தெரிந்து அண்ணாமலை பேச வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அவர் காணும் கனவை கலைக்க நான் விரும்பவில்லை.அவர் கனவு இருக்கட்டும்...
முத்தரசன், தங்கபாலு

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:தினமும், தன் பெயர் நாளிதழ்களில் வரவேண்டும் என்பதற்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏதாவது கூறுகிறார், அறிக்கை விடுகிறார். நாளிதழ்களை முழுமையாக படித்து, உண்மை தன்மையை தெரிந்து அண்ணாமலை பேச வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அவர் காணும் கனவை கலைக்க நான் விரும்பவில்லை.

அவர் கனவு இருக்கட்டும்... 'உங்க கட்சி நாடு முழுக்க இயங்குது... ஆனா, தமிழகத்தின் சார்புல தேர்வான ரெண்டே எம்.பி.,க்கள் தான் லோக்சபாவில் இருக்காங்க' என்ற உண்மையை அண்ணாமலை பேச ஆரம்பிச்சால் என்னாவது?தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேச்சு: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிளை, ஒன்றியங்களில் காங்., கட்சியை வலுப்படுத்த வேண்டும். உட்கட்சி தேர்தலில் போட்டி இல்லாமல் தங்களுக்குள் பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும். கட்சியினர் போட்டி இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

என்னமோ, தி.மு.க., - அ.தி.மு.க.,வில் கட்சி பதவிக்கு அடிச்சுக்கிற மாதிரி உங்க கட்சியிலும் நடக்குதுன்னு ஓவரா, 'பில்டப்' தரணுமா?பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்தது போல், மாணவர்கள், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டாது. அதையும் மீறி, மாணவர்கள் யாரேனும், பள்ளிக்குள் மொபைல் போன் கொண்டு வந்தால், அந்த போன் பறிமுதல் செய்யப்படுவதோடு, திருப்பித் தரப்பட மாட்டாது.


latest tamil newsமுதல்ல ஆசிரியர்களுக்கு இந்த நிபந்தனையை கொண்டு வாங்க... நிறைய பேர், மொபைல் போன்ல தான் மூழ்கி கிடக்கிறாங்க!மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை: விசாரணைக் கைதிகளை நடத்த வேண்டிய விதம் குறித்து, நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள், அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தாலும், லாக்கப் மரணங்கள் தொடர்வது கொடுமையானது. குற்றவாளியே என்றாலும் தண்டிக்கப்பட வேண்டியது நீதித் துறை தான்; காவல் துறையல்ல. காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர், காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்.

முதற்கண் இந்த அறிக்கையை எழுதியது கமல் தான் என்றால், அவர் பெயரில் வராமல், பொதுவா கட்சி பெயரில் ஏன் வரணும்... விக்ரம் படத்தை முதல்வரின் மகன் வாங்கி, வினியோகம் செய்ததற்கும், இதற்கும் சம்பந்தம் இருக்காது என நம்புவோம்!மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பா.ஜ., அல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதம்: கடந்த எட்டாண்டு கால பா.ஜ., ஆட்சியில் ஒடுக்குமுறை அதிகரித்து வருகிறது. ஜனநாயகம் இப்போது சர்வாதிகாரமாக மாறி விட்டது. இந்த அநீதிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய, ஜனாதிபதி தேர்தல் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து, 2024 லோக்சபா தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல்ல எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைச்சாலும், அது 2024 லோக்சபா தேர்தல் வரைக்கும் தாங்கும்னு நம்புறீங்களா?


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X