புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு, கடந்த பிப்., மாதத்திற்கு பிறகு தற்போது 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 8,822 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேர் பாதிக்கப்பட்டனர். இது, 38.4 சதவீதம் அதிகமாகும்.
தற்போது 53,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,624 பேர் குணமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,74,712 ஆனது.

தினசரி தொற்று விகிதம் 2.35 சதவீதமாகவும், வாரந்திர தொற்று விகிதம் 2.38 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் குணமடைபவர்களின் விகிதம் 98.65 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் காரணமாக 11 பேர் இறந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,803 ஆனது.
நேற்று 15,21,942 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 195.67 கோடி ஆனது.