5 மடங்கு அள்ளிக்கொடுத்த ‛‛வள்ளல்'' ஏ.டி.எம்: ‛வாரிச் சுருட்ட' வரிசையில் நின்ற மக்கள்

Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
நாக்பூர்: மஹாராஷ்டிராவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் ரூ.500 எடுக்க சென்றவருக்கு ஐந்து மடங்கு அதிக பணம் வந்த தகவல் வேகமாக பரவிய நிலையில், அப்பகுதி மக்கள் ஏ.டி.எம் வாசல் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது கபர்கெடா நகரம். இங்குள்ள ஏ.டி.எம் ஒன்றில் ஒருவர் பணம் நேற்று (ஜூன் 15) எடுக்க சென்றுள்ளார். ரூ.500 கோரி ஏ.டி.எம்.,
ATM In Maharashtra Dispenses 5 Times Extra Cash, Locals Rush In After News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் ரூ.500 எடுக்க சென்றவருக்கு ஐந்து மடங்கு அதிக பணம் வந்த தகவல் வேகமாக பரவிய நிலையில், அப்பகுதி மக்கள் ஏ.டி.எம் வாசல் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது கபர்கெடா நகரம். இங்குள்ள ஏ.டி.எம் ஒன்றில் ஒருவர் பணம் நேற்று (ஜூன் 15) எடுக்க சென்றுள்ளார். ரூ.500 கோரி ஏ.டி.எம்., மெஷினில் பதிவு செய்த அவருக்கு ஐந்து 500 ரூபாய் நோட்டுகள் என ரூ.2500 வந்துள்ளன. ஆனால் தனது கணக்கில் இருந்து ரூ.500 மட்டுமே குறைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் ரூ.500 எடுக்க முயற்சித்தார். அப்போதும் ரூ.2500 வந்துள்ளது.


latest tamil news


தான் கோரிய பணத்தை விட ஐந்து மடங்கு அதிகமான பணத்தை ஏ.டி.எம் தரும் தகவல் காட்டுத்தீ போல அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால், மக்கள் பெருமளவில் ஏ.டி.எம் வாசலில் பணமெடுக்க குவிந்தனர்.
இது குறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் உள்ளூர் போலீசுக்கு தகவல் கூறியதும், ஏ.டி.எம் மையத்தை போலீசார் மூடியதுடன், வங்கிக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து வங்கி அதிகாரி கூறுகையில், ‛தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏ.டி.எம் மையத்தில் கூடுதல் பணம் வந்துள்ளது. மெஷினில் ரூ.100 நோட்டுகள் வைக்கும் டிரேயில் தவறுதலாக ரூ.500 நோட்டுகளாக வைத்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
17-ஜூன்-202204:59:20 IST Report Abuse
Subramanian Sundararaman The size of Rs100 bin and Rs 500 bin is different in the ATM . The currency size of bigger denomination is larger than the lower ones . The design should not permit higher value currency to be loaded into a lower value currency bin , but viceversa it may be possible .
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
16-ஜூன்-202217:44:51 IST Report Abuse
Samathuvan இதை தான் நாங்க ஒன்றியம் இ வி எம் ல இப்படி தான் செய்யுதுன்னு சொன்னா எவன் நம்புறான்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-ஜூன்-202213:55:09 IST Report Abuse
கல்யாணராமன் சு.அப்போ சட்ட சபை தேர்தல்லே 125 சீட்டு, பாராளுமன்ற தேர்தல்லே 30 சீட்டெல்லாம் ??...
Rate this:
Cancel
16-ஜூன்-202216:40:38 IST Report Abuse
ஆரூர் ரங் யாரோ விட்டுப் போன 25 லட்சம் ரூபாயையும் போலீஸ் வசம் ஒப்படைத்த🤔 ஏழை ஆட்டோ ஓட்டுநர் இவர்களை விட கோடி மடங்கு நல்லவராகத் தெரிகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X