நீலக் கடல், வெண்மணல்... வசீகரிக்கும் லட்சத்தீவின் கவரட்டி!| Dinamalar

நீலக் கடல், வெண்மணல்... வசீகரிக்கும் லட்சத்தீவின் கவரட்டி!

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | |
பனிமலைக்கு காஷ்மீர், பாலைவனத்துக்கு ராஜஸ்தான்; இப்படி இந்தியாவில் இல்லாத நிலப்பரப்பே இல்லை. இருந்தாலும், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் காணப்படும் நீலக் கடல், வெண்மணல் இங்கு இல்லையே என்றால்... இருக்கிறதே, லட்சத்தீவில் இருக்கிறதே என பதில் வரும். கேரள மாநிலத்தின் கடற்கரையிலிருந்து 300 கிமீ தொலைவில், அரபிக்கடலில், இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமாக
Lifestyle, Travel, Lakshadeep, Kavaratti, BlueSea, WhitesandBeach, trip, Holidaytour, scuba diving, லைப்ஸ்டைல், பயணம், சுற்றுலா, லட்சத்தீவு, கவரட்டி, ஸ்க்குபா டைவிங், பீச், சூரியக்குளியல்

பனிமலைக்கு காஷ்மீர், பாலைவனத்துக்கு ராஜஸ்தான்; இப்படி இந்தியாவில் இல்லாத நிலப்பரப்பே இல்லை. இருந்தாலும், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் காணப்படும் நீலக் கடல், வெண்மணல் இங்கு இல்லையே என்றால்... இருக்கிறதே, லட்சத்தீவில் இருக்கிறதே என பதில் வரும். கேரள மாநிலத்தின் கடற்கரையிலிருந்து 300 கிமீ தொலைவில், அரபிக்கடலில், இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமாக லட்சத்தீவு உள்ளது.

இதுவரை நீங்கள் இங்கு டூர் போகாமல் இருந்திருந்தால் இப்போதே திட்டமிட ஆரம்பியுங்கள். சினிமா படத்தில் நாம் பார்த்த அழகிய பீச்களை கண்டு ரசிகலாம். இந்த இடத்திற்கு நிகரான இயற்கை அழகு நிறைந்த இடங்கள் எதுவுமே இல்லை என்று கூட சொல்லலாம்.
குட்டிக்குட்டி தீவுகளால் ஆன இந்த லட்சத்தீவுகளில் வெள்ளை மணல் கடற்கரைகள், நீல நிறக் கடல், நகரத்தின் எந்த அம்சங்களும் இல்லாத அழகான வாழ்விடங்கள் இப்படி நல்ல ஒரு ரிலாக்சிங் ஹாலிடே ஸ்பாட்டாக இருக்கும். அதிலும் கவரட்டி எனும் பகுதி உங்களை வேறு லோகத்திற்கே கூடி சென்ற உணர்வை ஏற்படுத்தும்.


latest tamil newsகவரட்டி தீவு:

லட்ச்சதீவின் தலைநகர் தான் இந்த கவரட்டி தீவு. இத்தீவில்தான் அரசு நிர்வாகத் தலைமையகம் உள்ளது. மேலும் இது ஒரு வளர்ச்சி அடைந்த தீவும் கூட. இது ஒரு குட்டித்தீவாக இருந்தாலும் கேளிக்கை கொண்டாட்டங்களின் மையமாக திகழ்கிறது. ஆண்டு முழுவதும் இதமான் தட்பவெட்பம் நிலவும்.

வெண் மணல் பீச்:

அது மட்டுமல்ல அழகிய பீச்கள் நிறைந்துள்ளதால் சூரியக்குளியல் போடவும், நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும் சிறந்த தளமாக உள்ளது. இந்த தீவை சுற்றி வளமான கடல் பகுதியிருப்பதால் கடலுக்கடியில் நீந்தும் ஸ்க்குபா டைவிங் விளையாட்டும் இங்கே மிகப்பிரபலம்.


latest tamil news


இங்கு 4,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மாசற்ற குளங்கள், வெதுவெதுப்பான நீர் மற்றும் கறைபடாத பவளப்பாறைகள், கவரட்டியை நாட்டின் மிகவும் கவர்ச்சிகரமான பகுதியாக காட்டுகிறது.

பாரம்பரிய மசூதிகள்:


latest tamil newsபாரம்பரிய கட்டடவேலைப்பாடுகள் கொண்ட மசூதிகள் இங்கு ஏராளம். பிரதானமான உஜ்ரா மசூதியுடன் சேர்ந்து மசூதிகள் மட்டுமே 52 உள்ளன. இந்த மசூதியில் உள்ள அழகிய வேலைப்பாடுகள் மரத்தால் ஆனது.

அது மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இங்கு மீன் காட்சி சாலையும் உள்ளது. மேலும் கண்ணாடியினால் ஆன அடித்தளமுள்ள படகுகளும் உள்ளன. நீர் விளையாட்டு உபகரணங்கள் வாடகைக்குக் கிடைக்கும். சினிமா செட்டிங்க் போல் காட்சி அளிக்கும் இந்த இயற்கை செட்டிங்கிற்கு ஒரு ஜாலி டிரிப்பிற்கு பிளான் பண்ணுங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X