அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சில மாநிலங்களில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம்

Updated : ஜூன் 17, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (85) | |
Advertisement
பாட்னா: இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'அக்னிபத்' என்ற திட்டத்திற்கு பீஹாரில் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் போராட்டம் நடந்தது. அதில் சில இடங்களில் வன்முறையாக மாறியது. ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உ.பி., மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. ராணுவத்தில், 'அக்னி வீரர்கள்' என்ற புதிய வேலை உருவாக்கப்பட்டுள்ளது.
Violence, Bihar, Agnipath, Scheme, Protest,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'அக்னிபத்' என்ற திட்டத்திற்கு பீஹாரில் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் போராட்டம் நடந்தது. அதில் சில இடங்களில் வன்முறையாக மாறியது. ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உ.பி., மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.



ராணுவத்தில், 'அக்னி வீரர்கள்' என்ற புதிய வேலை உருவாக்கப்பட்டுள்ளது. 'அக்னிபத்' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ராணுவத்திற்கு தேர்வு செய்பவர்களில் 25 சதவீதம் பேரை மட்டும் 4 ஆண்டுகள் கழித்து தொடர்ச்சியாக பணியில் வைத்து கொள்ளப்படுவார்கள். மற்றவர்கள் பணி பாதுகாப்பும் மற்றும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால், இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சில மாநிலங்களில் போராட்டம் கிளம்பியுள்ளது.

பீஹாரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.பல இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

பாபுவா சாலை ரயில் நிலையத்தில், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். ஒரு பெட்டிக்கு தீவைத்தனர்.

அராஹ் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடந்தது. அங்கு வந்த போலீசார் மீது கற்களை வீசினர். இதனையடித்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். தண்டவாளத்தில், ரயில் நிலையத்தில் இருந்த பொருட்களை வைத்து தீவைத்தனர். அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் அதனை அணைத்தனர்.

ஜெகனாபாத் என்ற இடத்தில் போராட்டத்தின் போது, பொது மக்கள் மீதும், போலீசார் மீதும் கற்களை வீசி தாக்கினர். போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் மாறி மாறி கற்களை வீசி கொண்டனர்.

நவாடா என்ற இடத்தில் சாலை மறியல் நடத்திய போராட்டக்காரர்கள், டயர்களை வைத்து எரித்தனர். புதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி கோஷம் போட்டனர். அங்குள்ள ரயில் நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியாக கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news




ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் அலுவலகத்தின் முன்பு இளைஞர்கள், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-202220:25:02 IST Report Abuse
முக்கண் மைந்தன் ////
Rate this:
Cancel
16-ஜூன்-202220:11:26 IST Report Abuse
அப்புசாமி இந்த மூஞ்சிங்க படிச்சமாதிரியும் தெரியலை. ராணுவ பரிட்சையில் பாஸ் பண்ணுற மாதிரியும் இல்லை. கொஞ்ச நாளில் பஞ்சம் பொழக்க இங்கே வந்துருவாங்க..பானிபூரி ஸ்டால் போடுவாங்க.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-ஜூன்-202211:22:15 IST Report Abuse
கல்யாணராமன் சு.அப்படியே நாம ஊரு ஆளுங்க குடுத்துருக்குற நேர்காணலையும் பாருங்க ? "அக்னி சாப்" திட்டத்தை எதிர்க்கிறோம்னு சொல்றாங்க ..... என்ன காரணம்னு கேட்டா "முதல்லே இது கார்ப்பரேட் திட்டம் மாதிரி இருக்குன்னுறாங்க" .... அவங்க இங்க வந்து பானி பூரி விப்பாங்க . நம்மாளுங்க என்ன பண்ணுவாங்க ? அவங்களை பத்தி memes போட்டு வாழ்க்கையை நடத்துவாங்க ..........
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
16-ஜூன்-202219:41:10 IST Report Abuse
mohan வெளி நாட்டு கயவர்களின் சதி ..இங்கே உள்ளவர்களை கையில் போட்டுகொண்டு போராட்டம் நடத்துகின்றனர்...இந்த போராட்ட காரர்களுக்கு, நூறு நாள் வேலை திட்டம் போல், இருக்கும், மக்களை, வீட்டில் சும்மா உட்காருங்கள்..உங்களுக்கு பணம் தருகிறோம் என்றால்....இந்த போராட்டத்தை தூண்டியவர்களுக்கு இனிக்கும்....நாட்டு பற்று அற்ற கயவர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X