" தொண்டர்கள் நினைப்பதுதான் நடக்கும் "- பன்னீர்செல்வம்

Updated : ஜூன் 17, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், அ.தி.மு.க., அலுவலகத்தில் வந்து தீர்மானக்குழு ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். கூட்டத்திற்கு முன்னதாக அவர் கூறுகையில்: " கட்சியில் தொண்டர்கள் நினைப்பதுதான் நடக்கும் " என்றார். வரும் 23ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு நடக்க உள்ள நிலையில், அக்கட்சியில் ஒற்றை தலைமை என்ற விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது
A.D.M.K,ADMK,Panneerselvam,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பன்னீர்செல்வம

சென்னை: வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், அ.தி.மு.க., அலுவலகத்தில் வந்து தீர்மானக்குழு ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். கூட்டத்திற்கு முன்னதாக அவர் கூறுகையில்: " கட்சியில் தொண்டர்கள் நினைப்பதுதான் நடக்கும் " என்றார்.

வரும் 23ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு நடக்க உள்ள நிலையில், அக்கட்சியில் ஒற்றை தலைமை என்ற விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடர்பாக பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சண்முகம், உதயகுமார், வைகை செல்வன் உள்ளிட்டோர் நடத்தினர். அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அங்கு வருவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் பாதியில் இருந்து கிளம்பி சென்றனர்.

முன்னதாக ஜெயக்குமார் கூறுகையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து முன்னர் ஆலோசிக்கப்பட்டது. இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. 18 ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்றார்.


latest tamil news





ஜெயக்குமாரை தாக்க முயற்சி ?


ஜெயக்குமார் கிளம்பி சென்ற போது, அவரது காரை கையாள் தாக்கிய பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள வீட்டில், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், கட்சியின் தலைமை அலுவலகம் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க., தொண்டர்கள் நினைத்தது நடக்கும் என்றார்.
அலுவலகம் வந்த பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், பொன்னையன், வைகைசெல்வன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, வைத்தியலிங்கம், உதயக்குமார், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202219:56:27 IST Report Abuse
Thangarajan Kanagaraman முறையாக தேர்தல் நடத்தி ஒற்றைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
16-ஜூன்-202219:20:59 IST Report Abuse
Arachi OPS EPS இரண்டு பேர் அதிமுக பிளவு படுவதற்குக் காரணம் அதிலும் பதவி வெறிபிடித்த எடப்பாடி என்றால் மிகையாகாது. பிஜேபியில் மோடி அமிக்ஷா என இரண்டு பேர், இவர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் மோடி அமிக்ஷாவை பார்த்துக்கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் நாட்டை யார் ஆளவேண்டும். திமுக அல்லது அதிமுக தான் ஆளவேண்டும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஜூன்-202218:21:26 IST Report Abuse
Vena Suna இவர் ஜெயிக்க மாட்டார். கட்சி உடையும். அதிமுக அழியும் . இது தான் முதல்வர் கனவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X