போலீஸ் சட்டையை பிடித்து இழுத்த முன்னாள் மத்திய அமைச்சர்

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
ஹைதராபாத்: ராகுலுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது, கைது செய்ய முயன்ற போலீசின் சட்டையை முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி பிடித்து இழுத்தார்.'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடந்த மோசடி குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறையினர் நேற்றும் விசாரணை நடத்தினர். நாளையும் விசாரணைக்கு ஆஜராக
Renuka Chowdhury, Congress protest ,Rahul Gandhi appears before ED, National Herald case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹைதராபாத்: ராகுலுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது, கைது செய்ய முயன்ற போலீசின் சட்டையை முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி பிடித்து இழுத்தார்.

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடந்த மோசடி குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறையினர் நேற்றும் விசாரணை நடத்தினர். நாளையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ராகுலுக்கு சம்மன் அனுப்பியதற்கும், விசாரணை நடத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு , தலைநகரங்களில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil newsதெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அப்போது, போராட்ட களத்தில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, போலீஸ் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்தார். இதனையடுத்து, அங்கிருந்த பெண் போலீசார், ரேணுகா சவுத்ரியை பிடித்து வேனிற்கு இழுத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
17-ஜூன்-202205:57:10 IST Report Abuse
thamodaran chinnasamy இவளைப்பற்றியெல்லாம் நாம் பேசி நேரத்தைவீணாக்கவேண்டாம் . காவல்துறையின் கண்ணியத்தைக்காலால் வுதைத்தவள் இவள் , பெண்மையயையே கேவலப்படுத்திவிட்டாள் . இவள் பின்னால் இருக்கும் பெண்போலீஸ் இவளுக்கு நல்லபடம் / பாடம் கற்றுத்தந்து இருக்கவேண்டும் .
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
17-ஜூன்-202205:55:47 IST Report Abuse
Ambika. K தப்புங்க, அந்த போலீஸ்காரர் இவரு கையை பிடிச்சு அவர் சட்டை காலரா தினிச்சு விட்டாரு.
Rate this:
Cancel
... - ,
16-ஜூன்-202219:48:51 IST Report Abuse
... போலீஸ் அதே மாதிரி இழுத்தா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X