ஆப்கனில் சாலையோரம் சமோசா விற்கும் டி.வி. ஆங்கர்

Updated : ஜூன் 16, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
காபூல்: ஆப்கானில் வருமானமின்றி வேலையிழந்த அந்நாட்டு பிரபல டி.வி. நெறியாளர் தெருவோரம் சமோசா விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அடுத்து அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக பலர் வேலைவாய்பின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 Viral: TV Anchor Sells Food On Street In Taliban-Ruled Afghanistan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காபூல்: ஆப்கானில் வருமானமின்றி வேலையிழந்த அந்நாட்டு பிரபல டி.வி. நெறியாளர் தெருவோரம் சமோசா விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அடுத்து அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக பலர் வேலைவாய்பின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். முதியவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.


latest tamil newsஇந்நிலையில் ஆப்கானைச் சேர்ந்த கபீர் அக்மல் என்ற சமூக செயற்பாட்டாளர், தனது டுவிட்டரில் சில புகைபடங்களை வெளியிட்டார். அதில் இளைஞர் ஒருவர் தெருவோரம் அமர்ந்து சமோசா விற்பது போன்ற புகைபடங்கள் வெளியாகின. .

அதில் இவர்தான் மெளசா முகம்மாதி ஆப்கானிஸ்தானில் பல்வேறு டி.வி. சேனல்களில் நிருபராக, நெறியாளராக பணியாற்றிவர். பன்முக திறமை கொண்ட இவர் இப்போது வேலை வாய்பை இழந்து வருமானமின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு தெருவோரம் சமோசா விற்கிறார் என குறிப்பிட்டார்.
இந்த புகைபடம் வைரலாக பரவியதையடுத்து, ஆப்கான் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் ஜெனரல் அகமதுதுல்லா வாஷிக், மெளசா முக்கமாதிக்கு பணி வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-ஜூன்-202206:42:51 IST Report Abuse
Natarajan Ramanathan பெட்ரோல் தீர்ந்து விட்டால் மத்திய கிழக்கு மூர்க்க நாடுகளிலும் இதே நிலைதான் சில ஆண்டுகளில் வரும். குண்டு போடாமல் சமூசா போட்டவனை பாராட்டலாம்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-ஜூன்-202204:02:50 IST Report Abuse
வெகுளி நம்மவூர் கூலிபான் ஆங்கனுக சமோசா விற்க கூட லாயக்கில்லாதவர்கள்...
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
16-ஜூன்-202223:43:06 IST Report Abuse
தமிழன் தீவிரவாதி இருக்குமிடத்தில் எவனுக்கும் நிம்மதியில்லை. அல்கொய்தாவை இனம் கண்டு உடனே அழித்தாலொழிய உலகம் அமைதி பெறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X