அமெரிக்க ராணுவ உயர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் பரிந்துரை

Updated : ஜூன் 17, 2022 | Added : ஜூன் 16, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையகமான 'பென்டகனில்' உள்ள உயர் பதவி ஒன்றுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ராதா அய்யங்கார் பிளம்ப்பை, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ராதா அய்யங்கார் பிளம்ப். இவர், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலையில், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலையில், பொருளாதாரத்தில் முதுகலை மற்றும்
அமெரிக்க ராணுவ உயர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் பரிந்துரை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையகமான 'பென்டகனில்' உள்ள உயர் பதவி ஒன்றுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ராதா அய்யங்கார் பிளம்ப்பை, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ராதா அய்யங்கார் பிளம்ப். இவர், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலையில், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலையில், பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார்.
பின் லண்டன் பொருளாதார பள்ளியில் துணை பேராசிரியராக பணியாற்றினார். அமெரிக்க அரசு பணியில் சேருவதற்கு முன், 'கூகுள் மற்றும் பேஸ்புக்' நிறுவனங்களின் கொள்கைப் பிரிவு இயக்குனராக பணியாற்றினார்.
அமெரிக்க அரசு பணியில் சேர்ந்த பின், ராணுவம், எரிசக்தி துறை, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பல உயர் பதவிகளை வகித்தார்.தற்போது, அமெரிக்க ராணுவ துணை அமைச்சரின் அலுவலக பணியாளர்கள் பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார். இவரை, ராணுவ தலைமையகமான பென்டகனில், சார்பு செயலர் என்ற உயர் பதவியில் நியமிக்க, அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-202208:15:29 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN அமெரிக்கா தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவு கொடுத்தா தூதரகத்தின் முன்பு ஊர்மணி போராடுவார் .....
Rate this:
Cancel
Sridhar - Chennai ,இந்தியா
17-ஜூன்-202200:40:34 IST Report Abuse
Sridhar Ayako. Americavilum paaroana aadhikamaa. UPs voice
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X