அ.தி.மு.க.,வில் உட்கட்சி குழப்பம்: பிரதமர் மோடி, அமித்ஷா அதிருப்தி

Added : ஜூன் 17, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை : ஜனாதிபதி தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பத்தால், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.வரும் ஜூலை 18-ம் தேதி, ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற, பா.ஜ., கூட்டணிக்கு 50 சதவீத ஓட்டுக்கள் இல்லாததால், காங்கிரசை எதிர்க்கும் நிலையில் உள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், பிஜு
ADMK, Amit Shah, Modi, PM Modi, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ஜனாதிபதி தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பத்தால், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் ஜூலை 18-ம் தேதி, ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற, பா.ஜ., கூட்டணிக்கு 50 சதவீத ஓட்டுக்கள் இல்லாததால், காங்கிரசை எதிர்க்கும் நிலையில் உள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை, பா.ஜ., கோரியுள்ளது.

இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, அ.தி.மு.க.,வின் ஐந்து எம்.பி.,க்கள், 66 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கள், பா.ஜ.,வுக்கு மிக முக்கியமானவை. இந்த நிலையில், அ.தி.மு.க.,வில் உள்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, முன்னாள் முதல்வர்களான பன்னீர்செல்வம் -- பழனிசாமி என, இரட்டை தலைமையின் கீழ், அ.தி.மு.க., இயங்கி வருகிறது.

இதை மாற்றி, ஒற்றை தலைமையின் கீழ், அதாவது மீண்டும் பொதுச்செயலர் அதிகாரத்தின் கீழ் கட்சியை கொண்டு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இது, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டி, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் கைக்கு கட்சியை கொண்டு வருவதற்கான முயற்சி என, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழல், தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், ஜூன் 23-ல் நடக்கவுள்ள அ.தி.மு.க., பொதுக்குழுவில், என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil news


ஜனாதிபதி தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,வில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த குழப்பம், பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க.,வில் நடக்கும் விவகாரங்கள் தொடர்பாக, மத்திய உளவுத் துறை வாயிலாக அறிந்த பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.,வில் நடக்கும் குழப்பங்கள் தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகமும், மேலிடத்திற்கு பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து, பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன், அமித்ஷா பேசியதாகவும் கூறப்படுகிறது.

உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., எதிர்ப்பு மனநிலை கொண்ட, அ.தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் மாற்றி ஓட்டளிக்கக் கூடும் அல்லது ஓட்டளிக்காமல் தவிர்க்கக் கூடும் என்ற தகவல், பா.ஜ.,வை கவலை அடையச் செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்க, தி.மு.க.,வும் துாண்டி விடலாம் என்றும், பா.ஜ., கருதுகிறது. எனவே, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., மேலிட தலைவர்கள், அ.தி.மு.க.,வில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

'உள்கட்சி பிரச்னையால் ஜனாதிபதி தேர்தலில் எந்த பிரச்னையும் வராது' என, பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும், அமித்ஷாவிடம் உறுதி அளித்துள்ளதாகவும், பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
17-ஜூன்-202211:43:12 IST Report Abuse
raja எடப்பாடியாரின் கீழ் அதிமுக வருவதே நல்லது என்று ஒவ்வரு தொண்டரும் நினைக்கிறார்கள் பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகாவை சின்னத்தாயிடம் அடகு வைத்து விடுவார் ....
Rate this:
Suri - Chennai,இந்தியா
17-ஜூன்-202218:56:54 IST Report Abuse
Suri.. ஹி ஹி ஹி...
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
17-ஜூன்-202211:11:06 IST Report Abuse
Narayanan Muthu முதலாளிகளுக்கு வரும் நியாயமான அதிருப்தி கோபம். குதிரை சவாரி செய்ய வேறு தோதான கட்சி இல்லாதது இதற்கான காரணம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-ஜூன்-202210:55:13 IST Report Abuse
duruvasar இது மாதிரி கூறப்படுவதாக தங்களுக்கு கூறியவர்களிடம் இதற்க்கு பி ஜே பி யின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என விசாரித்து இன்னும் சுவையான கூடுதல் விவரங்களை கொடுக்க முயற்சியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X