வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லாகூர் : பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்நகரில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள், காலைக்கடன் கழிக்க வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர். அப்போது, எதிரில் வந்த இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருவரையும் தூக்கிச் சென்று, பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர்.

சிறுமியரின் தந்தை அளித்த புகாரையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த உமைர் அஸ்பாக், காஷிப் அலி ஆகிய இருவரும்தான் சிறுமியரை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, உமைர் அஸ்பாக் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான காஷிப் அலி, நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுவிட்டார்.