வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : அடுத்த மாதம் 18ல் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்த வேண்டும் என, மம்தா பானர்ஜி விரும்புகிறார். இது தொடர்பாக ஆலோசிக்க, டில்லியில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார். இதில், தி.மு.க, சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய தலைவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தியிலேயே பேசினர். இதனால், டி.ஆர்.பாலுவுக்கு கோபம் ஏற்பட்டது. 'சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷிடம், 'நீங்களாவது ஆங்கிலத்தில் பேசுங்கள்' என கூறினார் .ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மறுத்துவிட்டார்.

காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை மம்தாவுக்கும் பிடிக்காது; சோனியாவுக்கும் பிடிக்காது. 'நான்தான் உண்மையான காந்தியவாதி; மற்றவர்கள் போலி' என, கோபால கிருஷ்ண காந்தி கூறுவார். இதனால் சோனியா, மம்தாவுக்கு அவரை பிடிக்காது என அரசியல வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய ஆலோசகர்:
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்யின் அரசியல் ஆலோசகராக, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருந்தார். கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், மம்தா - பிரசாந்த் கிஷோர் இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தன் அரசியல் ஆலோசகராக, சுதீந்திர குல்கர்னியை மம்தா நியமித்துள்ளார்.