கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: காஞ்சியில் 4 பேர் மீது பாய்ந்தது வழக்கு

Updated : ஜூன் 17, 2022 | Added : ஜூன் 17, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
காஞ்சிபுரம்: கந்து வட்டிக்காரர்கள் குறித்த புகாரில், காஞ்சிபுரத்தில் ஒரு வாரத்தில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'தகுந்த ஆதாரங்களுடன் கந்துவட்டிக்காரர்கள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்களால் பல குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம்: கந்து வட்டிக்காரர்கள் குறித்த புகாரில், காஞ்சிபுரத்தில் ஒரு வாரத்தில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'தகுந்த ஆதாரங்களுடன் கந்துவட்டிக்காரர்கள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார்.latest tamil news
தமிழகத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்களால் பல குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். கந்துவட்டிக்காரர்கள் மீது புகார் அளித்தும் முறையான நடவடிக்கை இல்லாததால் டி.ஜி.பி., சைலேந்திரபாபு கடந்த மாதம் 'ஆபரேஷன் கந்து வட்டி' என்ற பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பொது மக்கள் அளிக்கும் புகார்படி தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் ஒரு வாரத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான், 37, என்பவர் மகாதேவன் என்பவரிடம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இது வரையில் வட்டி 5 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் அசல் மற்றும் வட்டி கேட்டு மகாதேவன் மிரட்டியுள்ளார். உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரவுப், 49, என்பவர் கருவேப்பம்பூண்டி காலனியை சேர்ந்த தணிகை வேல், 42, என்பவரிடமிருந்து 1.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கு மாதம் மாதம் வட்டி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் மே மாதம் 11ம் தேதி 70 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு தணிகை வேல் அப்துல் ரவுப்பை மிரட்டியுள்ளார்.ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், 44, என்பவர் கச்சிப்பட்டு காலனி பகுதியை சேர்ந்த வினோத்குமார், 40, என்பவரிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்து 1 லட்சம் பெற்றுள்ளார். அதற்கு வட்டியாக 72 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் பத்திரம் கொடுப்பேன் என, வினோத்குமார் ரஞ்சித்குமாரை மிரட்டியுள்ளார்.


latest tamil news
காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம், 36, என்பவர் பூபதி, 42, என்பவரிடம் இருந்து 1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 1 லட்சம் கொடுக்க வேண்டும் என பூபதி, சந்தானத்தை மிரட்டியுள்ளார். பாதிக்கப் பட்டவர்கள் அளித்த புகார்படி நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்' என, எஸ்.பி., சுதாகர் தெரிவித்துள்ளார்.


எஸ்.பி., எச்சரிக்கைகாஞ்சிபுரத்தில் கந்துவட்டி ஆபரேஷன் திட்டத்தில் கடந்த வாரம் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆகிய இரு நபர்களிடமும் அதற்கான ஆதாரங்கள் சேகரித்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எத்தனை பேரிடம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்திருக்கிறார் என்பதையும் விசாரித்து வருகிறோம்.

குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் அவர்கள் கைது செய்யப்படுவர். கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம். கந்து வட்டி பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், ரவுடி என காட்டிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், கொலை மிரட்டல், பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.எம்.சுதாகர்மாவட்ட எஸ்.பி., காஞ்சிபுரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prasath - Krishnagiri District,இந்தியா
19-ஜூன்-202211:33:53 IST Report Abuse
Prasath கந்து வட்டிக்கு வாங்குவது குற்றம் என்று சொல்கிற இந்த மக்கள் ஏன் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வட்டிக்கு வாங்க முன் வர செயல்படுங்கள் ஆனால் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனமோ கடன் கொடுக்கும்போது கடன் வாங்குபவரின் அனைத்து document எல்லாம் வாங்கி வைத்து தான் கடன் கொடுக்கிறது ஆனால் மனிதாபிமான முறையில் பணம் கொடுத்தால் பணம் கொடுத்தவர் திருப்பி கேட்டால் பணம் வாங்கியவர் திட்டுகிறார்கள் முறை கிறார்கள் இந்த உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று கொஞ்சம் சிந்தியுங்கள் ஒவ்வொரு மனிதனும் நாணயத்தை வளர்த்துக்கொண்டால் எவரிடமும் யாரிடமும் எங்கேயும் எப்பொழுதும் கடன் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது வட்டிக்கு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-ஜூன்-202217:50:25 IST Report Abuse
Krishnamurthy Venkatesan பொதுமக்கள் புகார் தரவேண்டும் என எதிர்பார்க்காமல், காவல்துறையே இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி மார்க்கெட்களில் இந்த வட்டி கும்பல் ஆதிக்கம் அதிகம் என திரைப்படங்களில் காட்டுகிறார்கள்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-ஜூன்-202215:52:34 IST Report Abuse
D.Ambujavalli ஆவணங்களுடன் புகார் செய்யப்போனால், மறுநாள் ஆளே இருக்கமாட்டார் கந்துவட்டிக்குப் பயந்து தற்கொலை போக, கொலையே நிறைவேறிவிடும் பெரிய முதலை, திமிங்கிலங்கள் எல்லாம் பாதுகாப்பாக 'பிசினஸ் ' செய்யும் அங்கெ இங்கே நாலு பேரைப்பிடித்து, செய்தி போட்டதும் கமுக்கமாக வெளியே விட்டுவிடுவார்கள் சேர வேண்டியது போய் சேர்ந்து விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X