கண்டக்டர் இருக்கிறப்பவே பல விபத்துகள் நடந்துடுது...

Updated : ஜூன் 17, 2022 | Added : ஜூன் 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழக அரசின் விரைவு பஸ்சை, கண்டக்டர் இல்லா பஸ்களாக இயக்க முடிவெடுத்து, அதை அமல்படுத்த துவங்கி உள்ளது தமிழக அரசு. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் காலகட்டத்தில், கூடுதல் கவனத்தோடு பஸ்களை இயக்க வேண்டிய டிரைவர்களையே, கூடுதலாக கண்டக்டர் பணியையும் கவனிக்க செய்யும் இந்த முயற்சி விபரீதமானது; ஆபத்தானதும் கூட.தங்கள் கவலை நியாயம்
தினகரன், விஜயராகவன்

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழக அரசின் விரைவு பஸ்சை, கண்டக்டர் இல்லா பஸ்களாக இயக்க முடிவெடுத்து, அதை அமல்படுத்த துவங்கி உள்ளது தமிழக அரசு. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் காலகட்டத்தில், கூடுதல் கவனத்தோடு பஸ்களை இயக்க வேண்டிய டிரைவர்களையே, கூடுதலாக கண்டக்டர் பணியையும் கவனிக்க செய்யும் இந்த முயற்சி விபரீதமானது; ஆபத்தானதும் கூட.

தங்கள் கவலை நியாயம் தான்... கண்டக்டர் இருக்கிறப்பவே பல விபத்துகள் நடந்துடுது... இதுல, பஸ்களை வழிநடத்த அவரும் இல்லாம போனால், பொதுமக்களின் உயிருக்கு யார் உத்தரவாதம் தருவது?



செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனர் விஜயராகவன் பேச்சு: தமிழகத்தில் உள்ள துறைகள் தோறும், கலைச் சொல்லாக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் பயனாக, இதுவரை, 7.64 லட்சம் கலைச்சொற்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவ்வளவு வளமான தமிழ் மொழியில், நிறைய கலைச்சொற்கள் இருந்தும், பயன்படுத்துவதில் சுணக்கம் உள்ளது. இதை களைய அனைவரும் ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.

முதல்ல, அரசு தான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்... தமிழ், தமிழ் என முழங்கும் ஆட்சியாளர்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும்!



பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா பேட்டி: தமிழகத்தில் ஊழல் நடக்கும் போதே, அதை மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதால், அதிலிருந்து தி.மு.க.,வினர் பின்வாங்கி விடுகின்றனர். 'திராவிட மாடல்' என்றால், 'ஊழல் மாடல்' என அர்த்தம். ஜாதி வெறுப்பு, மொழி வெறுப்பு, தமிழகத்துக்கு நல்லதல்ல.


latest tamil news


விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் கைதேர்ந்த தி.மு.க.,வினர், இதற்கும் மாற்று வழியை கண்டுபிடிச்சிடுவாங்க, பாருங்களேன்!



தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரிய தலைவர் டாக்டர் அருணா வானிகர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி கிராமத் தொழில் ஆணையமானது, கதர் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தி, அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருகிறது. எனவே, மருத்துவமனைகள், மருத்துவ கல்வி நிறுவனங்கள், கதர் பொருட்களை தங்கள் வளாகத்தில் பரவலாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் படுகின்றன. கதரால் ஆன வெள்ளை அங்கிகளை டாக்டர்கள் அணிய, சம்பந்தப்பட்ட மருத்துவ கல்வி, மருத்துவமனை நிர்வாகங்கள் வலியுறுத்த வேண்டும்.

நல்ல விஷயம் தான்... வெறும் அறிக்கையோட நிறுத்திக்காம, கண்டிப்பா அமல்படுத்தவும் நடவடிக்கை எடுத்தால் நல்லது!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (3)

17-ஜூன்-202214:00:30 IST Report Abuse
ஆரூர் ரங் முன்பு ஒருமுறை அகரமுதலி யைக் காண நேர்ந்தது . அதெப்படி தயக்கமே 🤔இல்லாமல் வேற்று மொழிச் சொற்களை நமது மொழிச் சொற்களாக குறிப்பிட முடிகிறது?. எவை தற்சமம் எவை தற்பவம் என்பதில் தீராக்குழப்பம். வேற்றுமொழிச் சொற்கள் பொது மக்களிடையே ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பட்சத்தில் ஒதுக்க வேண்டாம். வேற்று மொழிச் சொற்களை பரந்த மனதுடன் ஏற்றத்தால்தானே இப்போது ஆங்கிலம் உலக மொழியாக விளக்குகிறது?. தூயதமிழ் என்பதே தவறான சொல்லாடல். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழ் மாறிக் கொண்டேதான் வளர்ந்தது.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
17-ஜூன்-202211:02:59 IST Report Abuse
தமிழன் P.. B.. - 7.64 லட்சம் கலைச்சொற்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ள தமிழ் மொழியில், இதனை எப்படி எழுதுவது என்று சொல்லுங்களேன்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-ஜூன்-202218:04:52 IST Report Abuse
கல்யாணராமன் சு.பின் குறிப்பு (பி. கு.) என்று எழுதலாமே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X